விமானத்தில் மீது கார் மோதி விபத்து… டெல்லி விமான நிலையத்தில் உச்சக்கட்ட பரபரப்பு!!

By Narendran S  |  First Published Aug 2, 2022, 4:50 PM IST

டெல்லி விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் மீது கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


டெல்லி விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் மீது கார் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிகார் மாநிலம் பாட்னா கிளம்புவதற்காக இன்று காலை இண்டிகோ விமானம்-6இ-2022 தயாராக இருந்தது. அப்போது இண்டிகோ விமானம் நின்று கொண்டிருந்த பகுதிக்கு அருகே சென்ற கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கு சொந்தமான மாருதி கார் ஒன்று, இண்டிகோ விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: விலைவாசி உயர்வு! ரூ.2 லட்சம் மதிப்புள்ள லூயிஸ் விட்டான் பேக்கை மறைத்தாரா மஹூவா மொய்த்ரா?

Tap to resize

Latest Videos

இந்த விபத்தில் விமானத்திற்கோ, பயணிகளுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், விமானம் திட்டமிட்ட நேரத்தில் பாட்னா புறப்பட்டுச் சென்றதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கப்பிரிவு திடீர் ரெய்டு

இதை அடுத்து கார் ஓட்டுநர் மது அருந்தியிருந்தாரா என்றும் மூச்சுப் பகுப்பாய்வி சோதனை செய்யப்பட்டது. ஆனால் அதில் எதிர்மறையான முடிவே வந்தது. இதனிடையே நாட்டின் மிக முக்கிய விமான நிலையத்திலேயே ஊழியர்களின் கவனக் குறைவால் இதுபோன்ற விபத்து நடந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதா என்பதை ஆராய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

click me!