cheetahs in india :75 ஆண்டுகளுக்குப்பின்!இந்தியா வரும் 'சீட்டா' சிறுத்தை புலிகள் !நமிபியாவிலிருந்து வருகை

By Pothy RajFirst Published Sep 12, 2022, 2:41 PM IST
Highlights

தென்ஆப்பிரி்க்க நாடான நமிபியாவிலிருந்து 8 சிறுத்தைபுலி ரகத்தைச் சேர்ந்த 8 சீட்டா புலிகள் இந்தியாவுக்கு வரும் 17ம் தேதி கொண்டு வரப்படுகின்றன.

தென்ஆப்பிரி்க்க நாடான நமிபியாவிலிருந்து 8 சிறுத்தைபுலி ரகத்தைச் சேர்ந்த 8 சீட்டா புலிகள் இந்தியாவுக்கு வரும் 17ம் தேதி கொண்டு வரப்படுகின்றன.

இந்த சீட்டா ரக சிறுத்தைப்புலிகள் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குனோ-பால்பூர் தேசிய பூங்காவில் சேர்க்கப்பட உள்ளன. 

வட ஆப்பிரிக்க நாடான நமிபியாவிலிருந்து சரக்குவிமானம் மூலம் ராஜஸ்தானின் ஜெய்பூர் நகருக்கு 8 சீட்டாரக சிறுத்தைப்புலிகளும் கொண்டுவரப்பட உள்ளன. அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோனோ-பால்பூர் தேசியப் பூங்காவில் வரும் 17ம் தேதி சீட்டா புலிகள் சேர்க்கப்படுகின்றன. 

டிராபிக் ஜாம்! 45 நிமிடங்கள் ஓடிவந்து அறுவைசிகிச்சை செய்து நோயாளி உயிர் காத்த மருத்துவர்

இதுகுறித்து தலைமை வனக்காப்பாளர் ஜேஎஸ் சவுகான் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ தென்ஆப்பிரி்க்காவின் நமியாவிலிருந்து 8 சீட்டாரக சிறுத்தைப் புலிகள் இந்தியாவருகின்றன. வரும் 17ம் தேதி குனோ-பால்பூர் தேசியப் பூங்காவில் சேர்க்கப்படுகின்றன. 

பிரதமர் வருகையையொட்டி இந்த நிகழ்வு நடக்கிறது. முதலில் இந்த சிறுத்தைகள் நமியாவிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்பூருக்கு சரக்கு விமானத்தில் வருகின்றன. அங்கிருந்து சிறியரக விமானங்கள், ஹெலிகாப்டர் மூலம் தேசியப்பூங்காவுக்கு வருகின்றன. 

சிறுத்தைப்புலிகளை கொண்டுவருவதில் எத்தனை ஹெலிகாப்டர்களை ஈடுபடுத்துவது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்யும். அன்றைய தினம் நடக்கும் நிகழ்ச்சியில் சீட்டா ரக சிறுத்தைகளை பிரதமர் மோடி தேசியப்பூங்காவில் இணைக்கிறார்.

கொரோனாவில் சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழப்பில் முரண்பட்ட தகவல்கள்: மத்திய அரசு குழப்பமான பதில்

 விலங்குகளை ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு மாற்றும் போது தேவைப்படும் சட்டப்பூர்வ ஆணையின்படி சிறிய அளவிலான 6 கூண்டுகளை அமைத்துள்ளோம். 

ஒரு நாட்டிலிருந்து மற்றொருநாட்டுக்கு விலங்குகள் கொண்டுவரப்படும்போது, அந்த விலங்குகள் ஒரு மாதம் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்த நாட்டில் உள்ள கிருமிகள், நோய்கள் இங்குள்ள விலங்குகளுக்கு பரவகக்கூடும்” எனத் தெரிவித்தார்

இந்தியாவில் கடைசியாக 1947ம் ஆண்டு கடைசியாக சீட்டா ரக சிறுத்தைப் புலிகள் இருந்தன. அவை சத்தீஸ்கர் மாநிலம், கொரியா மாவட்டத்தில் கடைசி சீட்டா புலியும் இறந்துவிட்டது.

முன்பு சத்தீஸ்கரின் கொரியா மாவட்டம், பிரிக்கப்படாத மத்தியப்பிரதேசத்தோடு இணைந்திருந்தது. அதன்பின் 1952ம் ஆண்டு சீட்டா ரக சிறுத்தைப் புலிகள் இந்தியாவிலிருந்து அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 

தேசிய கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர்ராவ்? தேசிய அரசியலில் உச்சகட்ட பரபரப்பு!!

ஆப்பிரிக்க சீட்டா ரக சிறுத்தைப் புலிகளை இந்தியாவில் சேர்க்கும் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்படிகடந்த ஆண்டு நவம்பர் மாதமே சீட்டா புலிகள் இந்தியா வந்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக தாமதமானது.
 

click me!