
கொரோனாவில் மருத்துவர்கள் உள்பட சுகாதாரப் பணியாளர்கள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற விவரத்தை வழங்குவதில் மத்திய அரசின் தகவல்கள் முரண்டதாக உள்ளன.
கொரோனாவில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு என்ன என்பதுகுறித்து தகவல்அறியும் உரிமைச்சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. கண்ணூரைச் சேர்ந்த கே.வி.பாபு என்ற மருத்துவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானச் செலவு ரூ.1800 கோடியாக அதிகரிக்கும்: அறக்கட்டளை தகவல்
இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்த பதிலில் “ செப்டம்பர் 1ம் தேதிவரை கொரோனாவில் 974 சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவுக்கு எதிரான போரில் உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு பிரதான் மந்திரி கரீப் கல்யான் பேக்கேஜ் திட்டத்தின் மூலம் ரூ.487 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளர்களுக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு செய்யப்பட்டிருந்தது.
இதில் 206 பேர் மருத்துவர்கள் இவர்களுக்காக ரூ.103 கோடி வழங்கப்பட்டது, 768 பேர் சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், சமூகப்பணியாளர்கள், இவர்களுக்கு ரூ.384 கோடி வழங்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது
இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவில் மத்திய அரசு அளித்த பதிலில் மொத்தம் 445 பேருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு மட்டும் ரூ.222.50 கோடி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வாரணாசி ஞானவாபி மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு: 144 தடை உத்தரவு;வழக்கின் விவரம் என்ன?
மருத்துவர்கள் உயிரிழந்த எண்ணிக்கையும், இழப்பீடு தொகையும் ஆர்டிஐ மனுவில் தெரிவித்த தகவலுக்கு முரணாக, மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
2020ம் ஆண்டிலிருந்து மாநில வாரியாக கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் குறித்த விவரம் தொடர்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் பதில் அளித்திருந்தனர்.
மத்திய சுகாதாரத்துறை இணைஅமைச்சர் பிரவீண் பவார் மாநிலங்களவையில் ஜூலை 26ம் தேதி அளித்த பதிலில் “ கொரோனாவில் தொழில்ரீதியாக உயிரிழந்தவர்கள் மற்றும் வேறுவிதமாக உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு பராமரிக்கவில்லை” எனத் தெரிவித்தார்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த பிப்ரவரி 8ம் தேதி மாநிலங்களவையில் அளித்த பதிலில் “ கொரோனாவில் உயிரிழந்த மருத்துவர்கள், உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்ள் 1,616 பேருக்கு 2022,ஜனவரி 31ம் தேதிவரை ரூ.808 கோடி பிரதமர் கரீப்கல்யான் பேக்கேஜ் திட்டம் மூலம் வழங்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
‘புரட்சிகர சாது’ துவராக பீடம் சங்கராச்சார்யா ஸ்வரூபானந்தா காலமானார்
இவை அனைத்துமே தற்போது ஆர்டிஐ மனுவில் மத்திய அரசு வழங்கிய தகவல்களுக்கு முரணாக அமைந்துள்ளன. எத்தனை மருத்துவர்கள் கொரோனாவில் உயிரிழந்தார்கள், எத்தனை மருத்துவ சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்தார்கள் குறித்து எந்தத் தெளிவான தகவலும் இல்லை.
இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்ட தகவலில், கொரோனாவில் ஏறக்குறைய 1800 மருத்துவர்கள் உயிழந்தனர். முதல் அலையில் 757 மருத்துவர்கள், 2வது அலையில் 839 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.