கர்நாடக தேர்தல்: நந்தினி Vs அமுல்.. பாஜக - காங்கிரஸ் மோதல் - குறுக்க இந்த குஜராத் மிளகாய் வந்தா.!

By Raghupati R  |  First Published Apr 12, 2023, 5:52 PM IST

கர்நாடகா தேர்தலில் தற்போது அமுலுக்குப் பிறகு குஜராத் மிளகாய் சூடு பிடிக்கிறது. விரைவில் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழல் அரசியல் கலாம் பரபரப்பாக உள்ளது.


குஜராத்தை மையமாகக் கொண்டு செயல்படும் அமுல் நிறுவனம், பால் விநியோகத்திலும், பால் பொருட்கள் விநியோகத்திலும் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் இந்நிறுவனம் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. 

இந்நிலையில், இந்நிறுவனம் கர்நாடகாவிலும் தனது சேவையைத் தொடங்கி உள்ளது. தலைநகர் பெங்களூருவில் அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கும் என அமுல் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து, அம்மாநில எதிர்க்கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Tap to resize

Latest Videos

undefined

கர்நாடக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அமுல் - நந்தினி விவகாரம் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நந்தினி பால் மற்றும் பால் பொருட்களை மட்டுமே வாங்குவோம் என்று பெங்களூரு ஹோட்டல் சங்கமும் அறிவித்துள்ளது. அமுல் Vs நந்தினி என்று உள்ள பிரச்சனையில் தற்போது மிளகாயும் சேர்ந்துள்ளது. 

அமுல் பாலை தொடர்ந்து குஜராத் மிளகாய் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. லாலி என்றும் அழைக்கப்படும் புஷ்பா என்ற குஜராத்தி மிளகாய் வகை தான் அது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான பியாடகியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பல்வேறு ஊடக அறிக்கைகளின்படி, சமீப மாதங்களில், குஜராத்தி மிளகாய், பைடாகி சந்தையில் குறைந்தது 20,000 குவிண்டால் அளவுக்கு விற்கப்பட்டது. புஷ்பா பூர்வீக டப்பி மற்றும் கேடி வகைகளுடன் போட்டியிடவில்லை என்ற போதிலும், குஜராத் ரகத்தின் கணிசமான அளவு உள்ளூர் சந்தைக்கு வந்துள்ளது. மிக நீண்ட காலமாக அவற்றின் நிறத்தை பராமரிக்காவிட்டாலும், உள்ளூர் வகைகளை விட புஷ்பா மிளகாய் சிவப்பு நிறத்தில் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இதையும் படிங்க..சத்தமே இல்லாமல் அப்டேட்டை கொடுத்த பொன்னியின் செல்வன் 2 படக்குழு.. அடேங்கப்பா இப்படியொரு அப்டேட்டா

பியாடகி சந்தையின் ஆதாரங்களின்படி, குறைந்தபட்சம் 70 மிளகாய் வியாபாரிகள், சந்தைக்கு அருகில் உள்ள பல்வேறு குளிர்பதனக் கிடங்குகளில் குஜராத்தின் மிளகாய்களை வைத்திருந்துள்ளனர். குஜராத் மிளகாய், பியாடகியில் விலை நிர்ணயம் வேகமாக உயர்ந்ததன் விளைவாக இப்பிரச்சனை எழுந்துள்ளது. 

"இந்தப் பருவத்தில் குஜராத் மிளகாய் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஏபிஎம்சி சட்டத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கொள்முதல் செய்பவர்கள் அங்கீகாரம் பெறாமல் நாட்டில் எங்கிருந்தும் விவசாய விளைபொருட்களை வாங்கலாம். இதன் விளைவாக, ஏபிஎம்சிக்கு வழங்குவதைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும்" என்று ஹெச் ஒய் சதீஷ் கூறினார். 

அமுல் பால் கர்நாடகாவில் நுழைந்து, தேர்தல் காலத்தில் மாநிலத்தில் உள்ளூர் கூட்டுறவு டைரியான 'நந்தினி' ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் அரசியல் கொதித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சமீபத்திய சர்ச்சை வந்துள்ளது. மே 10 வாக்குப்பதிவுக்கு முன்னதாக குஜராத்தி மிளகாய் மேலும் அரசியல் வெப்பத்தை உயர்த்தும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க..உடனே ராஜினமா.! 12 மாத சம்பளத்தை வாங்குங்க - அமேசான், கூகுள் போட்ட அதிரடி உத்தரவு

இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?

click me!