BS Yediyurappa: பாலியல் வழக்கில் எடியூரப்பாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்!!

By Dhanalakshmi GFirst Published Jun 13, 2024, 5:15 PM IST
Highlights
பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
எடியூரப்பா தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 17 வயது சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் அடிப்படையில், எடியூரப்பா மீது போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. 

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் விசாரணைக்கு ஆஜராக பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா தவறினார். இதையடுத்து, எடியூரப்பாவுக்கு எதிராக பெங்களூரு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் இன்று பிறப்பித்துள்ளது. முன்னாள் முதல்வர் தற்போது உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. 

முன்னதாக, எடியூரப்பாவை புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு கர்நாடக காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நோட்டீஸ் அனுப்பி இருந்தது. 81 வயதான அவர், அரசியல் காரணத்திற்காக டெல்லி செல்ல வேண்டியிருந்தது என்றும், திங்கட்கிழமை ஆஜராவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

முன்னதாக, போலீஸ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை சிஐடிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே, இவர் மீது புகார் கொடுத்து இருந்த 54 வயதுக்காரர் கடந்த மாதம் நுரையீரல் புற்றுநோயால் இறந்துவிட்டார். 

இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள எடியூரப்பா, சட்டரீதியாக போராடுவேன் என்றும், சிஐடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும் தெரிவித்து இருந்தார். 

இன்று முன்னதாக, கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, தேவைப்பட்டால் முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்படலாம் என்றும் கூறியுள்ளார். "தேவைப்பட்டால், சிஐடி கைது செய்வார்கள் (அவசியம் என்றால்) நான் சொல்ல முடியாது. சிஐடி தான் சொல்ல வேண்டும்," என்று அமைச்சர் பரமேஸ்வரா கூறியுள்ளார். 

கர்நாடகா புதிய பாஜக தலைவர்: எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமனம்!

விசாரணைக்காக எடியூரப்பாவின் குரல் மாதிரியை சிஐடி சேகரித்தது. எப்ஐஆரை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். காவல்துறையின் ஆதாரங்களின்படி, 2024 பிப்ரவரி 2 ஆம் தேதி, மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் உதவியை நாட தாயும் மகளும் சென்றிருந்தபோது பாலியல் வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்தது என்று கூறப்படுகிறது.

click me!