வேற லெவல் ஸ்பீடு! சாட்டிலைட் இன்டர்நெட் சேவையைத் தொடங்க ஜியோவுக்கு அனுமதி!

By SG Balan  |  First Published Jun 13, 2024, 4:38 PM IST

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) வழங்கிய இந்த அனுமதி மூலம் ஆர்பிட் கனெக்ட் இந்தியா வான் பரப்பில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி, இன்டர்நெட் சேவையை வழங்கலாம்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், லக்சம்பேர்க்கின் SES உடன் இணைந்து, சாட்டிலைட் இன்டர்நெட் சேவை வழங்குவதற்கு இந்தியாவின் விண்வெளி கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்திருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு அரசாங்க அதிகாரியின் கூற்றுப்படி, ஆர்பிட் கனெக்ட் இந்தியாவிற்கு மூன்று ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இது செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை வழங்குவதற்கான முயற்சியின் ஒரு பகுதி ஆகும் என்று கூறப்படுகிறது.

Latest Videos

undefined

ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) வழங்கிய இந்த அனுமதி மூலம் ஆர்பிட் கனெக்ட் இந்தியா வான் பரப்பில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி, இன்டர்நெட் சேவையை வழங்கலாம்.

இருப்பினும், சேவை தொடங்குவதற்கு முன் தொலைத்தொடர்புத் துறையின் கூடுதல் அனுமதிகளைப் பெறவேண்டும். அவை இன்னும் தேவை கோரப்படவில்லை என்று தெரிகிறது.

ட்விட்டரில் இனி ரகசியமாக லைக் செய்யலாம்! பிரைவசியை உறுதிசெய்ய புதிய வசதி அறிமுகம்!

ஏற்கெனவே, அமேசான் மற்றும் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் போன்ற நிறுவனங்கள் இந்த செயற்கைக்கோள் தகவல்தொடர்பு சேவைகளை வழங்குவதற்கான முயற்சியில் உள்ளன. இந்நிலையில் ஜியோவுக்குக் கிடைத்திருக்கும் ஒப்புதல் ஒரு முக்கியமான செய்தியாக உள்ளது.

IN-SPACe தலைவர் பவன் கோயங்கா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இன்மார்சாட் மற்றும் பிற செயற்கைக்கோள்களை இயக்குவதற்கான அனுமதியை ஜியோ பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார். செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவையை வழங்குவதில் ஜியோ ஆர்வமாக இருப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

உலகளவில், செயற்கைக்கோள் இணையம் மூலம் கிராமப்புறங்களில் இன்டர்நெட் சேவை வழங்குவதற்கு போட்டி அதிகரித்துள்ளது. அமேசான் தனது கைபர் சாட்டிலைட் இன்டர்நெட் திட்டத்தில் 10 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. ஸ்பேஸ்எக்ஸின் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. சமீபத்தில், ஸ்டார்லிங்க் இலங்கையில் தனது சேவைகளை வழங்குவதற்கான பூர்வாங்க அனுமதியையும் பெற்றுள்ளது.

ஒரு சொட்டு பெட்ரோல் கூட வேஸ்ட் ஆகாது! 150-160 cc பைக்கில் பக்கா மைலேஜ் கிங் பைக் எது தெரியுமா?

click me!