Narendra Modi : NSA மற்றும் பிற அதிகாரிகளுடன் ஜம்மு காஷ்மீர் நிலைமை குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். அதில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலவி வரும் பதட்டமான நிலையை கருதி, NSA மற்றும் பிற அதிகாரிகளுடன் இணைந்து மறுஆய்வு கூட்டம் ஒன்றை பிரதமர் மோடி நடத்தினார். அதில் நமது பயங்கரவாத எதிர்ப்பு திறன்களின் முழு அளவையும் பயன்படுத்துமாறு அவர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசிய அவர், பாதுகாப்புப் படையினரை நிலைநிறுத்துவது மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமரின் தலைமையில் நடைபெற்ற இந்த அவரச உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) மற்றும் பிற உயர் அதிகாரிகளுக்கு நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புத் திறன்களை முழுவதுமாகத் திரட்டுமாறு அவர் அறிவுறுத்தினார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் உடனடியாக பாதுகாப்புப் படைகளை அனுப்புவது குறித்தும், அப்பகுதியில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதித்தார்.
undefined
குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் பலி: டெல்லியில் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் முக்கிய ஆலோசனை
கூடுதலாக, அவர் ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹாவுடன் தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலை குறித்தும் கேட்டறிந்தார். கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி அன்று, ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற 53 இருக்கைகள் கொண்ட பேருந்து, பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பள்ளத்தாக்கில் விழுந்தது.
முக்கியமாக உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியில் இருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் மூன்று பெண்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 33 பேர் காயமடைந்தனர். கூடுதலாக, செவ்வாய்க்கிழமை இரவு, ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரின் கூட்டுச் சோதனைச் சாவடியில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அங்கு துப்பாக்கிச் சண்டை நடக்க துவங்கியது.
இதில் ஐந்து ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி காயமடைந்தனர். கதுவா மாவட்டத்தின் சர்தால் பகுதியின் எல்லையான சட்டர்கலா பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் காவல்துறை மற்றும் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் ஆகியவற்றின் கூட்டுச் சோதனைச் சாவடியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் அளித்த செய்தியின்படி, சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். இதனால் பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர், இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய காஷ்மீர் புலிகள் பொறுப்பேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சம்பவத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் ஒரு மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் கொல்லப்பட்டார். மேலும் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உள்ளூர்வாசி ஒருவர் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கண்டு எச்சரிக்கை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு 2024: கருணை மதிப்பெண்கள் ரத்து... மறுதேர்வு - மத்திய அரசு தகவல்!