Dating APPs: அழகிகளின் புகைப்படங்களை வைத்து தொழில் அதிபர்களுக்கு வலை; டேட்டிங் ஆப்பால் வந்த பகீர் சம்பவம்

By Velmurugan sFirst Published Jun 13, 2024, 4:20 PM IST
Highlights

டேட்டிங் ஆப்பில் அழகிகளின் புகைப்படங்களை பகிர்ந்து தொழில் அதிபர்களுக்கு வலை விரித்து பணம் பறிப்பில் ஈடுபட்ட 7 நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வடமாநிலங்களைச் சேர்ந்த சிலர் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் அழகான இளம் பெண்களின் புகைப்படங்களை காண்பித்து ஹைதராபாத்தில் வசிக்கும் தொழிலதிபர்களுக்கு வலை வீசி உள்ளனர். அவர்கள் விரித்த ஆன்லைன் வலையில் சிக்கிய சபல தொழிலதிபர்களை ஹைதராபாத் மாதாப்பூரில் உள்ள மோஷ்பப்பிற்கு வரவழைத்த கும்பல் அழகான இளம் பெண்கள் மூலம் விலை உயர்ந்த மது வகைகளை அவர்களுக்கு வழங்கி குடிக்க செய்துள்ளனர்.

அப்போது அந்த சபல தொழிலதிபர்கள் நீங்கள் காண்பித்த பெண்கள் எங்கிருக்கிறார்கள் என்று கேட்டபோது, முதலில் மது அருந்துங்கள். நீங்கள் கேட்ட பெண்கள்  இப்போது வந்து விடுவார்கள். நீங்கள் ஜாலியாக இருப்பதற்கு தேவையான அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து வைத்திருக்கிறோம் என்று கூறி சமாளித்திருக்கிறார்கள்.

Latest Videos

புதிய அணைக்கு தடை கோரும் தமிழகம்; முல்லைப்பெரியாறு அணையில் மத்திய குழு இன்று ஆய்வு

இந்த நிலையில் அழகான இளம் பெண்கள் தொழிலதிபர்களுக்கு மது வழங்குவது, இளம் அழகிகள் பற்றி அவர்கள் விசாரித்த முறை ஆகியவற்றை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்து கொண்ட அந்த கும்பல் நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்க தவறினால் உங்களுடைய இந்த செயல்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டி பெருமளவில் பணம் வசூலித்துள்ளனர். 

அனாதையாக இறந்து கிடந்தவருக்கு இந்து முறைப்படி இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்கள் - வேலூரில் நெகிழ்ச்சி சம்பவம்

பாதிக்கப்பட்ட தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மாதாப்பூர் போலீசார் அழகிகளின் படங்களை காண்பித்து அழகான இளம் பெண்கள் மூலம் மது பரிமாறி பெரும்பணம் பறித்த பத்து பேர் கொண்ட கும்பலில் ஏழு பேரை கைது செய்து விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது தவிர இந்த வழக்கில் தொடர்புடைய பெண்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!