நொய்டா இரட்டை கோபுரம் : தகர்ப்பில் சேதமடைந்த சுவர்; 30 ஆயிரம் டன் கழிவுகள் - அடுத்து என்ன ?

Published : Aug 28, 2022, 06:08 PM ISTUpdated : Aug 28, 2022, 10:51 PM IST
நொய்டா இரட்டை கோபுரம் : தகர்ப்பில் சேதமடைந்த சுவர்; 30 ஆயிரம் டன் கழிவுகள் - அடுத்து என்ன ?

சுருக்கம்

நொய்டாவில் இருக்கும் இரட்டை கோபுர கட்டிடம் இன்று தகர்க்கப்பட்டது. இதற்காக 3700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டன.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சூப்பர் டெக் என்ற நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்ட இரட்டைக் கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் அபெக்ஸ் என்ற கோபுரம் 32 மாடிகளை கொண்டதாகும். இதன் உயரம் 328 அடியாகும். இதன் மற்றொரு கோபுரமான சியான் 31 என்பது 31 மாடிகளை உடையது.

இரட்டை கோபுரங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டதைத் தொடர்ந்து அந்த இரு கட்டடங்களையும் இடித்து தள்ள உச்சநீதிமன்ம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணி அளவில் இக்கட்டிடம் தகர்க்கப்பட்டது.மூன்று நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் குழுவினர், 20,000 இணைப்புகளின் வழியே 40 மாடிகளிலும் வெடிப்பொருட்களை வைத்தனர். 

மேலும் செய்திகளுக்கு..“மக்களிடம் உண்மையாக இருங்க.. 8 வழிச்சாலை சரியான திட்டம் தான் !” முதல்வருக்கு அறிவுரை கூறிய அண்ணாமலை!

அதன்பின்னர் ஏறக்குறைய 3,700 கிலோ வெடிமருந்துகளை வைத்து இந்த கட்டடம் வெறும் 9 வினாடிகளில் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த கட்டடத்தை இடித்ததன் மூலம் சுமார் 30,000 டன் கட்டுமான கழிவுகள் குவிந்ததாகவும், 1,200 லாரிகளை கொண்டு மூன்று மாதங்கள் இந்த கழிவுகளை அகற்ற வேண்டியிருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளனர். 

இதுவே இந்தியாவில் வெடிவைத்து தகர்த்தப்பட்ட மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடமாகும். இந்த கட்டிடத்தை தகர்த்த எடிஃபிஸ் நிறுவனத்தை சேர்ந்த சேத்தன் தத்தா செய்தியாளர்களிடம் பேசிய போது, ‘இரட்டை கோபுரத்தில் இருந்து  70 மீட்டர் தொலைவில் இருந்தேன். 100% வெற்றிகரமாக முடிவடைந்தது. முழு கட்டிடமும் இடிக்க சுமார் 9 முதல் 10 வினாடிகள் ஆனது’ என்று கூறினார்.

Noida Twin Tower Video: 9 வினாடிகளில் சுக்குநூறான நொய்டா இரட்டை கோபுரங்கள்

இன்று காலை அந்தக் கட்டிடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் 7,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களின் வீடுகளில் உள்ள மின் இணைப்பு, கியாஸ் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு அவை திரும்ப வழங்கப்பட்டன. 5.30 மணிக்கு அவர்கள் தங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்பலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தூசு அதிகம் இருக்கும் என்பதால் முகக்கவசம் அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

ஏபெக்ஸ் கட்டிடத்தில் 32 தளங்களும், சியேன் கட்டிடத்தில் 29 தளங்களும் இருந்தன. முன்னதாக இரண்டு கட்டிடங்களிலும் தலா 40 தளங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றம் சென்றுவிட்ட நிலையில், கட்டிடத்தின் சில பகுதிகள் நிறைவுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டிட இடிப்புக்கு சுமார் 20 கோடி செலவானதாக கூறப்படுகிறது.

நொய்டா இரட்டை கோபுரம் தகர்ப்பு… எச்சரிக்கையை மீறி இயங்கிய வாகனங்களால் ஸ்தம்பித்த சாலைகள்!!

இதுகுறித்து பேசிய நொய்டா மாசு கட்டுப்பாட்டு வாரியம்,  '80 ஆயிரம் டன் இடிபாடுகளும் வீணாகாது. அதன் மூலம் 4 ஆயிரம் டன் இரும்புகள் மற்றும் எஃகு கிடைக்கும். இதை இடிப்பு செலவில் ஒரு பகுதியை மீட்க எடிஃபைஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது . ஒரு நாளைக்கு 300 டன் குப்பைகள் வீதம் மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறினார். இந்த தகர்ப்பு மூலம் அருகில் உள்ள 10 மீட்டர் சுவர் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!

PREV
click me!

Recommended Stories

இந்தியா-ரஷ்யா நட்பால் வயிற்றெரிச்சல்..! கதறப்போகும் தென்னிந்திய விவசாயிகள்..! டிரம்ப் எடுத்த அதிர்ச்சி முடிவு..!
வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!