Viral Video : நொய்டா இரட்டை கோபுர கட்டடம் தகர்ப்பு.. 9 நொடியில் தரைமட்டமான 300 கோடி கட்டிடம்

Published : Aug 28, 2022, 02:41 PM ISTUpdated : Aug 28, 2022, 10:34 PM IST
Viral Video : நொய்டா இரட்டை கோபுர கட்டடம் தகர்ப்பு.. 9 நொடியில் தரைமட்டமான 300 கோடி கட்டிடம்

சுருக்கம்

இன்று மதியம் 2.30 மணிக்கு இந்தியாவின் இரட்டை கோபுரங்கள் என்று அழைக்கப்படும் நொய்டாவின் பிரபல இரட்டை கோபுர கட்டிடம் இடிக்கப்பட்டது.

உத்தர பிரதேம் மாநிலம் நொய்டாவில், தனியார் நிறுவனத்தின் சார்பில் 40 மாடிகளை கொண்ட இரட்டைக் கோபுர கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடமானது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டது தெரியவந்ததை அடுத்து, உச்சநீதிமன்றம் இதனை இடிக்க உத்தரவிட்டது. அதன்படி இன்று மதியம் 2.30 மணிக்கு இரட்டைக் கோபுரங்கள் இடிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு..கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!

இரட்டைக் கோபுர தகர்ப்புக்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டது. அதன்படி,  இரட்டை கோபுர கட்டடத்தின் அருகே உள்ள 5000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த சுமார் 1,500 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இரட்டை கோபுர தகர்ப்பையொட்டி இன்று நொய்டாவில் குறிப்பிட்ட பகுதியில் ‘டிரோன்கள்’ பறக்க தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. 

மேலும் செய்திகளுக்கு..“மக்களிடம் உண்மையாக இருங்க.. 8 வழிச்சாலை சரியான திட்டம் தான் !” முதல்வருக்கு அறிவுரை கூறிய அண்ணாமலை!

தகர்ப்பு வேளையில் 1 நாட்டிகல் மைல் தூரத்துக்கு வான்வெளியில் விமானம் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டடத்தை இடிக்க சுமார் 37,000 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!