பயங்கரமான திருவிழாவா இருக்கே! ஒருவர் மீது ஒருவர் கல்எறியும் நிகழ்ச்சிக்கு மக்களும், மருத்துவர்களும் தயார்

By Pothy Raj  |  First Published Aug 27, 2022, 5:16 PM IST

திருவிழா என்றாலே சொந்தங்கள், நண்பர்களை சந்திப்பதும், அவர்களுக்கு விருந்துக்கு அழைப்பதும், அல்லதுநாம் அவர்கள் வீட்டுக்கு விருந்துக்குச் செல்வதும் என்பதைத்தான் வழக்கமாகப் பார்த்திருக்கிறோம்.


திருவிழா என்றாலே சொந்தங்கள், நண்பர்களை சந்திப்பதும், அவர்களுக்கு விருந்துக்கு அழைப்பதும், அல்லதுநாம் அவர்கள் வீட்டுக்கு விருந்துக்குச் செல்வதும் என்பதைத்தான் வழக்கமாகப் பார்த்திருக்கிறோம்.

ஆனால், மத்தியப் பிரதேசம், சிந்த்வாரா மாவட்டத்தில் நடக்கும் கோட்மர் திருவிழாவில் ஊர் மக்கள் சேர்ந்து ஒருவர் மீது கல் எறிந்து திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். 

Tap to resize

Latest Videos

திருவிழாவைக் கேட்கும்போதே பயங்கரமாக இருக்கே!

துபாயில் ரூ. 639.67 கோடிக்கு வில்லா மாடலில் பிரம்மாண்ட வீடு வாங்கிய முகேஷ் அம்பானி; யாருக்காக வாங்கினார்?

இந்த திருவிழாவுக்கு மக்கள் ஒருபுறம் தயாராகி வரும்நிலையில் காயம் அடையும் மக்களுக்கு சிகிச்சையளி்க்க மருத்துவர்கள் குழுவும் தயாராகி வருகிறது. கடந்த முறையை விட கூடுதலாக மருத்துவக் குழுக்கள் குவிக்கப்படஉள்ளனர். இது தவிர திருவிழாவில் கல்எறிதல் எல்லை மீறிச் செல்லக்கூடாது என்பதற்காக போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர். 

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ் உய்கே தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர ட்ரோன்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன, ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராவும், சில இடங்களில் 144 தடை உத்தரவும் போலீஸார் பிறப்பித்துள்ளனர். 

நீதித்துறையில் காலியிடங்களை நிரப்பி சீர்திருத்தம் : முக்கிய வழக்குகளை மறந்த என்.வி.ரமணா

கோட்மர் திருவிழா

சிந்த்வாரா மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடக்கும் கல் எறிதல் திருவிழாவில் பங்கேற்றதில் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்த திருவிழாவில் பங்கேற்று கல்எறியவும், கல்லெறி வாங்கவும் ஸ்வரகான், பதுர்னா உள்ளி்ட்ட அண்டை கிராமங்களில் இருந்தும் மக்கள் பங்கேற்கிறார்கள்.

ஏன் இந்த திருவிழா

கல் எறிதல் திருவிழா ஏறக்குறைய 300 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. பதுர்னா கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன், ஸ்வராகான் கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை கடத்தி வந்துவிட்டார். இரு கிராமத்துக்கு இடையே இருக்கும் ஆற்றை இருவரும் கடக்கும்போது, ஸ்வராகான் மக்கள் கல் எறிந்து அவர்களை செல்லவிடாமல் தடுத்தனர். அப்போது பதுர்னா கிராம மக்கள் வந்து சிறுமியையும், சிறுவனையும் மீட்டு காப்பாற்றினர். இதன் நினைவாக இரு கிராமத்தினரும் கல்லெறிந்து கொண்டாடுகிறார்கள்.

bjp: amit shah:ஆசாத் விலகல்: அமித் ஷா தலைமையில் பாஜக நிர்வாகிகள் அவசரக் கூட்டம்

இதேபோன்ற திருவிழா உத்தரகாண்ட் மாநிலத்திலும் கொண்டாடப்படுகிறது. அங்குள்ள சம்பவாத் மாவட்டத்தில் உள்ள குமான் கிராமத்தில் வாக்வல் என்ற திருவிழா நடக்கிறது.

அங்கும் இதேபோன்று மக்கள் வாரஹி தேவிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி எறிந்து கொள்வார்கள். இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆண்டு தோறும் பங்கேற்கிறார்கள். கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக திருவிழா நடக்கவி்ல்லை. கொரோனாவுக்கு முந்தைய ஆண்டு நடந்த திருவிழாவில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


 

click me!