
இந்த கட்டிடத்தில் 915 வீடுகள், 21 கடைகள் கட்டப்பட்டன. இந்த கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்ததையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முதலில் அலகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இரட்டை கோபுர கட்டிடத்தினை இடிக்க உத்தரவிட்டது. அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது சூப்பர்டெக் நிறுவனம்.
இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் விதிகளை மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரங்களை இடித்து தரைமட்டமாக்க தீர்ப்பு அளித்தது. இரட்டை கோபுர கட்டிடத்தினை வெடி வைத்து நொடியில் தரைமட்டமாக்கும் பணி, எடிபைஸ் இன்ஜினியரிங் எனும் தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இதனால், கடந்த மே மாதம் கட்டடங்கள் இடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப கோளாறுகள் திட்டமிட்டபடி இடிக்க முடியவில்லை. இதன் காரணமாக மூன்று மாதம் அவகாசம் கோரப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..“மக்களிடம் உண்மையாக இருங்க.. 8 வழிச்சாலை சரியான திட்டம் தான் !” முதல்வருக்கு அறிவுரை கூறிய அண்ணாமலை!
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், போபண்ணா அடங்கிய அமர்வு, வரும் 28ல் அதாவது ஆகஸ்ட் மாதம் 28ல் இரட்டை கோபுரங்களை இடிக்க நீதிபதிகள் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளனர். 3,700 கிலோ வெடிமருந்துகளை கொண்டு இந்தக் கட்டடங்கள் தகர்க்கப்படவுள்ளன. இதற்காக மூன்று நாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
வெடிகுண்டுகளை வைத்து இரு கட்டடங்களும் அவற்றுக்குள்ளாகவே இடிந்து விழும்படி வெடிக்க வைத்தபிறகு, ஐந்து மணிநேரம் கழித்து தான் அப்பகுதியினர் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். தெருக்களில் சுற்றித் திரியும் உயிரினங்கள் அப்புறப்படுத்தப்பட்டு முகாம்களில் சேர்க்கப்படும். மேலும் அப்பகுதியிலும் அருகிலுள்ள முக்கிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்படும்.
இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்படும் போது, 984 அடி உயரம் வரையில் தூசு பரவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, விமான நிலையங்களில் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இரட்டைக் கோபுரங்கள் கீழே விழுந்த பிறகு, 30,000 டன் கட்டுமான குப்பைகள் குவியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 1,200 லாரிகள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்காவது அங்கிருந்து குப்பைகளை அகற்ற வேண்டியிருக்கும்.
மேலும் செய்திகளுக்கு..கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!
பாதுகாப்பு பணியில் சுமார் 560 போலீசார், 100 ரிசர்வ் படைகள், 4 என்டிஆர்எஃப் குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுமானத்தின் அடிப்படையில் இந்த கட்டிடம், சுமார் 300 கோடி மதிப்பு என்று கூறப்படுகிறது. இதுபற்றி கூறிய என்ஜினீயர்கள், தற்றமாக இருக்கிறேன். ஆனால் திட்டமிட்டபடி கட்டட இடிப்பை செய்வோம் என 100 சதவீதம் நம்புகிறோம். இந்த கட்டட இடிப்பால் பிற கட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாது பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம்' என்று கூறினர்.
அதுமட்டுமில்லாமல், அதிர்வுகள் 30 மீட்டர்கள் வரை உணர முடியும். ஆனால் நல்வாய்ப்பாக, நொய்டா நகரம் ரிக்டர் அளவு 6 வரை நில அதிர்வுகளை தாங்கும் என்பதால் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த இடிப்பு காரணமாக அக்கம் பக்கத்தில் உள்ள சுமார் 7,000 பேர் காலை 7 மணிக்கு இந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் மாலை 5.30 மணிக்கு மீண்டும் அவரவர் குடியிருப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
அதேபோல 28ம் தேதி காலை முதல் மாலை 4 மணி வரை எரிவாயு மற்றும் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்படும். இந்த இடிப்பு மூலம் உருவாகும் காற்று மாசை கணக்கிட இப்பகுதிகளில் நவீன இயந்திரங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு அடிக்கடி அபாய நிலையை கடந்து வரும் நிலையில் இந்த கட்டிட இடிப்பால் டெல்லிக்கு அருகே உள்ள நொய்டாவிலும் மாசு அதிகரிப்பதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !