
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் இன்னும் 14 நாட்களில் ஜம்மு காஷ்மீரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய கட்சியை தொடங்குவார் என்று அவரின் நெருங்கிய நண்பர், உதவியாளர் ஜிஎம் சரூரி தெரிவித்தார்
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய குலாம் நபி ஆசாத், தலைமையுடனும், ராகுல் காந்தியுடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து நேற்று விலகினார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு, அனைத்து பதவிகளில் இருந்தும் ஆசாத் விலகுவதாக அறிவித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்.
cji:ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, நீதிபதிகளுக்கு 'வாழ்நாள் சலுகைகள்': மத்திய அரசு புதிய அறிவிப்பு
அதுமட்டுமல்லாமல் ஜம்மு காஷ்மீர் சென்று புதிதாக கட்சி தொடங்கப் போதவாகவும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது இதையொட்டி இந்த முடிவை ஆசாத் எடுத்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதற்கிடையே குலாம் நபி ஆசாத் காங்கிரஸிலிருந்து வெளியேறியது தெரிந்தவுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள அவரின் ஆதரவாளர்கள், முக்கிய தலைவர்கள் பலரும் காங்கிரஸிலிருந்து வெளியேறினர். இதனால் குலாம் நபிஆசாத் புதிய கட்சியை தொடங்கும் பணி விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து குலாம் நபி ஆசாத்தின் நெருங்கிய உதவியாளர் சரூரி கூறுகையில் “ ஜம்மு காஷ்மீரை தலைமையிடமாகக் கொண்டு அடுத்த 14 நாட்களில் குலாம் நபி ஆசாத் புதிய கட்சியைத் தொடங்குவார். அவரின் கட்சியின் முக்கய நோக்கம், கொள்கையாக, 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முந்தையநிலையை ஜம்மு காஷ்மீரில் கொண்டுவருவதாக இருக்கும்
காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்தல் தள்ளிப் போகலாம்? நாளை காரியக் கமிட்டி கூட்டம்
பாஜகவுக்கும், குலாம் நபிஆசாத்துக்கும் வெகு தொலைவு இருக்கிறது. கொள்கையளவில் குலாம்நபி ஆசாத் மதச்சார்பற்றவர் என்பதால், பாஜகவுடன் இணைவு, பாஜக நலன்களுக்காக செயல்படுவது என்ற கேள்விக்கே இடமில்லை.
குலாம் நபி ஆசாத் காங்கிரஸிலிருந்து வெளியேறியதுதெரிந்தவுடன் மூத்த தலைவர்கள், பஞ்சாயத்ராஜ் அமைப்பின் உறுப்பினர்கள், ஆதராளர்கள் என ஏராளமானோர் கட்சியின் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துவிட்டனர். வரும் செப்டம்பர் 4ம் தேதி குலாம் நபி ஆசாத் , தனது நலம் விரும்பிகளுடன் ஆலோசனை நடத்தஉள்ளார். அதன்பின் கட்சி குறித்து அவர் அறிவிப்பார்.
ஜம்மு காஷ்மீருக்கு குலாம் நபி ஆசாத் திரும்ப மீண்டும் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. ஜம்மு காஷ்மீரில் முதல்வராக குலாம் நபி ஆசாத் கடந்த 2005 முதல் 2008 வரை இருந்தகாலம் பொற்காலம். அந்த காலம் திரும்ப வர வேண்டும்.
நீதித்துறையில் காலியிடங்களை நிரப்பி சீர்திருத்தம் : முக்கிய வழக்குகளை மறந்த என்.வி.ரமணா
புதிய கட்சி மாநிலத்தின் வளர்ச்சி, அனைத்து சமூகத்தின் ஒற்றுமை, 2019, ஆகஸ்ட் 5ம்தேதிக்கு முந்தைய நிலையை அடிப்படையாக வைத்து அமையும். குலாம் நபி ஆசாத் வெளியேறிவிட்டதால், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் ஏறக்குறைய முடிந்துவிட்டது.
இவ்வாறு சரூரி தெரிவித்தார்