காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் நேற்று விலகிய நிலையில் ஜம்மு காஷ்மீர் பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் நேற்று விலகிய நிலையில் ஜம்மு காஷ்மீர் பாஜக நிர்வாகிகளுடன் மத்திய அமைச்சர் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் அரசியல் சூழல், கட்சியின் நிர்வாகிகள், செயல்பாடு, எதிர்வரும் தேர்தலுக்கு எவ்வாறு தயாராவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பாஜக நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய குலாம் நபி ஆசாத், தலைமையுடனும், ராகுல் காந்தியுடனும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து நேற்று விலகினார். காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு, அனைத்து பதவிகளில் இருந்தும் ஆசாத் விலகுவதாக அறிவித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்.
அதுமட்டுமல்லாமல் ஜம்மு காஷ்மீர் சென்று புதிதாக கட்சி தொடங்கப் போதவாகவும் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது இதையொட்டி இந்த முடிவை ஆசாத் எடுத்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் பாஜக வட்டாரங்கள் கூறுகையில் “ ஜம்மு காஷ்மீரில் இப்போதைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று பாஜக எதிர்பார்க்கவில்லை. தேர்தல் அறிக்கை தயாரித்தல், தொகுதிகள், எவ்வாறு தேர்தலுக்கு தயாராவது குறித்துதான் பாஜக ஆலோசித்து வருகிறது.
தேர்தல் எப்போது நடத்துவது என்பதை தேர்தல் ஆணையம்தாந் தீர்மானிக்கும் ஆனால், தேர்தலை எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ள பாஜக தயாராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் நேற்றைய சந்திப்பில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்திர ரெய்னா, தேவேந்திர சிங் ராணா, ஜூகல் கிஷோர், சக்தி ராஜ் பரிஹார், பாஜக பொதுச்செயலாளர் ஜம்முகாஷ்மீர் பொறுப்பாளர் தருண் சவுக், துணைப் பொருப்பாளர் ஆஷிஸ் சூத் ஆகியோரும் பங்கேற்றனர்.
மோடி வலை! குலாம் நபிக்காக மோடி கண்ணீர்விட்டபோதே முடிஞ்சது! ஆதிர் ரஞ்சன் விளாசல்
பாஜக மூத்த தலைவர்கள் கூறுகையில், “ மத்திய அமைச்சர் அமித் ஷாவை நாங்கள் சந்தித்துப் பேசுவது என்பது முன்கூட்டியே திட்டமிட்டது. நாங்கள் அமித் ஷாவைசந்தித்துப் பேசியதற்கும் குலாம் நபி ஆசாத் காங்கிரஸிலிருந்து வெளியேறியதற்கும் தொடர்பு ஏதும் இல்லை.
காங்கிரஸ் கட்சியிலிருந்து குலாம் நபி ஆசாத் வெளியேறியபின் மாநிலத்தில் புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், ஆசாத்தின் திட்டங்கள் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது” எனத் தெரிவித்தனர்.