congress: CWC: காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்தல் தள்ளிப் போகலாம்? நாளை காரியக் கமிட்டி கூட்டம்

By Pothy Raj  |  First Published Aug 27, 2022, 2:06 PM IST

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உள்கட்சித் தேர்தல் மேலும் சில வாரங்கள் தள்ளிப்போகும் என்று பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.


காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உள்கட்சித் தேர்தல் மேலும் சில வாரங்கள் தள்ளிப்போகும் என்று பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நாளை காணொலியில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில்தான் தேர்தல் நடத்தும் தேதி இறுதியாகும் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Tap to resize

Latest Videos

நீதித்துறையில் காலியிடங்களை நிரப்பி சீர்திருத்தம் : முக்கிய வழக்குகளை மறந்த என்.வி.ரமணா

காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் பாரத் ஜடூ யாத்திரை செப்டம்பர் 7ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த யாத்திரையை நடத்துவதில் காங்கிரஸ் நிர்வாகிகள் தீவிரமாக இருப்பதால், இப்போதைக்கு தேர்தல் நடக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே நாளை பிற்பகல் 4 மணி அளவில் காணொலி வாயிலாக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் நடக்கிறது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காரியக் கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்தக் கூட்டத்தில் தேர்தல் நடத்தும் தேதி, குலாம் நபி ஆசாத் விலகல், அடுத்துவரும் குஜராத், இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல், புதிய தலைவர் தேர்தல் தேதி ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது

narendra modi: பிரதமர் மோடி இன்றும், நாளையும் குஜராத் பயணம்: பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேவை, தேர்தல் நடத்த வேண்டும் என்று ஜி23 தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர். அந்தப் போர்க்கொடி தூக்கியதில் முக்கியத் தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல் ஆகியோர் கட்சியில் இப்போது இல்லை. 

ஆனால், இந்த விவகாரம் கடந்த ஆண்டு எழுந்தபோது, 2022, ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவித்திருந்தது

மண்டல அளவில் தேர்தலை ஏப்ரல் 16 முதல் மே 31ம் தேதி வரையிலும் மாவட்ட தலைவர் தேர்தலை ஜூன்1 முதல் ஜூன் 20ம் தேதிவரையிலும் மாநில காங்கிரஸ் தலைவர், அனைத்து இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 20ம்தேதிக்குள் நடத்த முடிவு செய்யப்பட்டது. தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

மோடி வலை! குலாம் நபிக்காக மோடி கண்ணீர்விட்டபோதே முடிஞ்சது! ஆதிர் ரஞ்சன் விளாசல்

ஆனால் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்படுவதையடுத்து, தலைவர் தேர்தல் நடத்துவது சில வாரங்கள் தள்ளிப்போகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாரத் ஜூடோ யாத்திரை என்பது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 3,570 கி.மீ பயணமாகும்.

இந்த யாத்திரையில் பல்வேறு மாநிலங்கள் தீவிர ஏற்பாடுகளைச் செய்துவருவதால், தேர்தலுக்கு முழுமையாகத் தயாராகவில்லை.இந்த யாத்திரை மொத்தம் 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களை கடந்த வருகிறது. 

இதற்கிடையே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளிப்படையாகவே, “ காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்திதான் தலைவராக வரவேண்டும். அவர் தலைவராக வராவிட்டால் தொண்டர்கள் சோர்ந்துவிடுவார்கள்” எனத் தெரிவித்தார். 

ஆனால் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள், மூத்த தலைவர்கள் கூறுகையில் “ ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டில் தீவிரமாக உள்ளதால், தலைவர் பதவிக்கு அவர் போட்டியிடமாட்டார்” எனத் தெரிவித்தனர்

click me!