பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக குஜராத்துக்கு இன்று செல்கிறார். அங்கு 2001ம் ஆண்டு பூகம்பத்தால் உயிரிழந்தவர்களுக்கு எழுப்பப்பட்டுள்ள நினைவிடத்தை திறந்து வைத்தும், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக குஜராத்துக்கு இன்று செல்கிறார். அங்கு 2001ம் ஆண்டு பூகம்பத்தால் உயிரிழந்தவர்களுக்கு எழுப்பப்பட்டுள்ள நினைவிடத்தை திறந்து வைத்தும், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
குஜராத்தில் இன்றும்(27ம்தேதி) நாளையும்(28ம்தேதி) பிரதமர் மோடி பல்வேறு நிகழச்சிகளில் பங்கேற்கிறார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி இன்று அகமதாபாத் நகருக்கு வருகிறார். அங்கு சபர்மதி ஆற்றங்கரையில் நடத்தப்படும் காதி உத்சவ் நிகழ்ச்சியில் மாலை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சுஸூகி நிறுவனம் இந்தியாவுக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு செய்கிறது. இதையொட்டி காந்திநகரில் நாளை நடக்கும் நிகழ்சியில் மோடி பங்கேற்கிறார்
Our prized possession, the Sabarmati Riverfront just gets better as we open doors to the Atal Bridge. The modern marvel would be E-Inaugurated, tomorrow 27th August, Saturday by H'ble PM Shri Ji. pic.twitter.com/F9BllFNiR0
— Amdavad Municipal Corporation (@AmdavadAMC)2001ம் ஆண்டு குஜராத்தின் பூஜ் நகரில் நிகழ்ந்த பயங்கரமான நிலநடுக்கத்தில் 13ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். இந்த பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக 470 ஏக்கரில் ஸ்மிருதி வான் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இந்த நினைவிடம் 7 அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. மறுபிறவி, மறுமலர்ச்சி, தக்கவைத்தல், கட்டமைப்பு, மறுசிந்தனை, மறுவாழ்வு, புதுப்பித்தல் ஆகிய 7 அம்சங்களை வைத்து அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர பிரதமர் மோடி ரூ.4,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பூஜ் நகரில் அடிக்கல் நாட்ட உள்ளார்.
ஆசாத் கா அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக காதி உத்சவ் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. காதி ஆடையின் மகத்துவம், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
I will be in Gujarat tomorrow and the day after. At 5:30 PM tomorrow, will take part in the Khadi Utsav which is being organised at the iconic Sabarmati Riverfront. This programme celebrates India’s vibrant and diverse Khadi tradition. https://t.co/XmXj3wycVu
— Narendra Modi (@narendramodi)குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காதி ஆடைநெசவில் இருக்கும் 7500 கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மேலும் குஜராத் ராஜ்ய காதி கிராமோத்யோக் வாரியத்துக்கான புதிய கட்டிடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
வெளியானது உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியல்... மீண்டும் முதலிடத்தில் பிரதமர் மோடி!!
சுஸூகி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இரு முக்கியத் திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுகிறார். ஹன்சால்பூரில் பேட்டரி கார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்தல், ஹரியாணாவில்உள்ள கார்கோடாவில் கார் தயாரிப்பு தொழிற்சாலை அமைத்தல் அடிக்கல் நாட்டப்படுகிறது. கார்கோடா தொழிற்சாலை அமைக்கப்பட்டால் ஆண்டுக்கு 10லட்சம் கார்கள் தயாரிக்கப்படும்.