துபாயில் ரூ. 639.67 கோடிக்கு வில்லா மாடலில் பிரம்மாண்ட வீடு வாங்கிய முகேஷ் அம்பானி; யாருக்காக வாங்கினார்?

By Dhanalakshmi G  |  First Published Aug 27, 2022, 11:21 AM IST

இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி துபாயில் பீச் அருகில் ரூ. 639.67 கோடிக்கு வில்லா மாடலில் வீடு ஒன்று வாங்கியுள்ளார். இந்த வீடு தீவுப் பகுதியில் அமைந்து இருக்கிறது.


இந்தியா மட்டுமின்றி ஆசிய  பணக்காரர்களில் முன்னணியில் இருப்பவர் முகேஷ் அம்பானி. மும்பையில் இருக்கும் இவரது ஆன்டிலியா வீடு இன்றளவும் பேசப்படுகிறது. ஆன்டிலியா மாளிகை 27 தளங்களை கொண்டுள்ளது. இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.15,000 கோடியாகும். பிரிட்டிஷ் ராயல் குடும்பத்துக்கு சொந்தமாக லண்டனில் இருக்கும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த மாளிகையாக ஆன்டிலியா கருதப்படுகிறது. 

தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் ஆன்டிலியா மாளிகை அமைந்து இருக்கிறது. ஆன்டிலியா மாளிகையில் மூன்று ஹெலிகாப்டர்கள் இறங்கும் அளவிற்கு தளங்கள் அமைக்கப்பட்டு,  168 கார்கள் கேரேஜ்களும் அமைக்கப்பட்டு உள்ளன. 9 அதிவேக லிஃப்ட், 50 இருக்கைகள் கொண்ட மினி தியேட்டர் என சகல வசதிகளும் கொண்டுள்ளது ஆன்டிலியா.  இதேபோன்று லண்டனிலும் மிகப் பிரம்மாண்ட வீடு ஒன்று சமீபத்தில் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில், சமீபத்தில் துபாயிலும் பிரம்மாண்ட வில்லா மாடல் வீடு வாங்கியிருக்கிறார். துபாயின் பிரபலமான பால்ம் ஜுமெய்ரா என்ற இடத்தில் வாங்கி இருக்கிறார். முமேஷ் அம்பானி இந்த வீட்டை தனது சிறிய மகன் ஆனந்த் அம்பானிக்காக வாங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

வெளியானது உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியல்... மீண்டும் முதலிடத்தில் பிரதமர் மோடி!!

இந்த வீட்டில் மொத்தம் பத்து படுக்கை அறைகள் இருக்கின்றன. தனிப்பட்ட முறையில் ஸ்பா, வீட்டிற்குள், வெளியே என இரண்டு நீச்சல் குளங்கள் உள்ளன. உலகிலேயே துபாயின் ரியல் எஸ்டேட் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனால், உலகம் முழுவதும் இருந்து பிரபலங்கள், தொழிலதிபர்கள் என துபாயில் வீடு மற்றும் ரியல் எஸ்டேட்களில் முதலீடு செய்து வருகின்றனர். 

துபாயில் முகேஷ் அம்பானி வாங்கியிருக்கும் வீட்டுக்கு அருகேதான் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிரிட்டன் கால்பந்து வீரர் டேவிட் பெக்கம் மற்றும் இவரது மனைவி விக்டோரியாவின் வீடுகள் இருக்கின்றன. 

கடந்தாண்டு முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமின் சேர்மன் ஆக நியமிக்கபட்டு இருந்தார். இதையடுத்து இவர், பிரிட்டனில் ரூ. 6,310,784,650 கோடி மதிப்பிலான வீடு வாங்கி இருந்தார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன. இவரைத் தொடர்ந்து இவரது சகோதரி இஷாவும் நியூயார்க்கில் வீடு வாங்குவதற்காக தயாராகி வருகிறார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்திய தேசிய கொடியில் மேட் இன் சைனா என்ற வாசகம்… சபாநாயகர்கள் மாநாட்டில் சர்ச்சை!!

துபாயில் வாங்கப்பட்டு இருக்கும் பிரம்மாண்ட வீடு, ரிலையன்ஸ் வெளிநாட்டு நிறுவனங்களின் கீழ் வரும் என்று கூறப்படுகிறது. இந்த வீட்டை அம்பானி குடும்பத்திற்கு நீண்ட நாட்களாக பராமரிப்புகளை மேற்கொண்டு வரும் பரிமல் நதானி மேற்கொள்ளும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. பால்ம் ஜுமெய்ரா தீவில்தான் அந்த நாட்டின் பிரபலமான ஓட்டல்கள், ரெசார்ட்கள் உள்ளன.

click me!