கொரோனாவில் உயிரிழந்த மக்களுக்காக இதுவரை பிரதமர் மோடி ஒரு சொட்டு கண்ணீர்விட்டிருப்பாரா ஆனால், குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் போது மோடி கண்ணீர்விட்டார். ஆதலால், குலாம் நபி காங்கிரஸிலிருந்து விலகியதில் வியப்பில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
கொரோனாவில் உயிரிழந்த மக்களுக்காக இதுவரை பிரதமர் மோடி ஒரு சொட்டு கண்ணீர்விட்டிருப்பாரா ஆனால், குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் போது மோடி கண்ணீர்விட்டார். ஆதலால், குலாம் நபி காங்கிரஸிலிருந்து விலகியதில் வியப்பில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர், அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்தார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் எழுதினார்.
இந்திய தேசிய கொடியில் மேட் இன் சைனா என்ற வாசகம்… சபாநாயகர்கள் மாநாட்டில் சர்ச்சை!!
ஆனால், மருத்துவப் பரிசோதனைக்காக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வெளிநாடு சென்ற நிலையில் குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகி கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சென்று, சொந்தமாக கட்சி தொடங்க இருப்பதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று ராய்பூரில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது, அவரிடம் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்ததாவது:
தனது முகவரை பணியமர்த்த இந்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை… டிவிட்டர் விளக்கம்!!
குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதில் வியப்பு ஏதும் எனக்கு இல்லை. மோடியின் வலையில் குலாம் நபி விழுந்துவிட்டார். குலாம் நபி மாநிலங்களவையி்ல் ஓய்வு பெறும்போது பிரதமர் மோடி கண்ணீர்விட்டபோதே முடிஞ்சது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி தொடர்ந்து குலாம் நபி ஆசாத்துக்கு வழங்கப்பட்டிருந்தால் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியிருக்கமாட்டார்.
நான் டெல்லியில் குலாம் நபி ஆசாத் இல்லத்துக்கு எதிராகத்தான் குடியிருக்கிறேன். மத்தியில் மோடி அரசு வந்தபின், ஒரு எம்.பி.யோ அல்லது அமைச்சரவோ தனது பதவியிலிருந்து இறங்கிவிட்டால், நீண்டநாட்கள் அரசு இலத்தில் தங்கமுடியாது. விரைவாக வீட்டை காலி செய்ய உத்தரவு வந்துவிடும்.
ஆனால், குலாம் நபி ஆசாத் எம்.பி. பதவி இல்லாமல் 6 மாதங்கள் அரசுஇல்லத்திலேயே குடியிருக்கிறார். அவரை மத்திய அரசு காலி செய்யக் கூறவில்லை.
நான் கேட்கிறேன், கொரோனாவில் இந்தியாவில் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தார்கள். ஒருவருக்காவது பிரதமர் மோடி கண்ணீர்விட்டாரா. ஆனால், மாநிலங்களவையில் குலாம் நபி ஆசாத் பதவிக்காலம் முடிந்து 2021 பிப்ரவரி மாதம் ஓய்வு பெறும்போது, பிரதமர் மோடி கண்ணீர் விட்டார்.அப்போதே நினைத்தேன். குலாம் நபி ஆசாத் மோடியின் வலையில் விழுந்துவிட்டார், அனைத்தும் முடிந்துவிட்டது.
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. 2030க்குள் 6ஜி வருது - பிரதமர் வெளியிட்ட சூப்பர் தகவல் !
மாநிலங்களவைக்கு மீண்டும் நியமிக்கப்படமாட்டோம் என்று குலாம் நபி ஆசாத்துக்கு தெரிந்தபின் அவர் விரக்தி அடைந்துவிட்டார். ஒவ்வொருவரையும் அனைத்து முறையும் மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் நியமிக்காது. மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தால்தான் கட்சியில் குலாம் நபி ஆசாத் தொடர்கிறார். எம்.பி. பதவி இல்லாவிட்டால் கோபப்படுகிறார், கட்சியிலிருந்து விலகுகிறார்.
குலாம் நபி ஆசாத்தின் 50 ஆண்டு கால அரசியலில் காங்கிரஸ் கட்சி அவருக்கு ஏராளமான சுதந்திரத்தை வழங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முதல்வராக குலாம் நபியை காங்கிரஸ் நியமித்தது, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தது, காங்கிரஸ் கட்சியில் பலதலைமுறையினர் இவருக்கு பதவி கொடுத்துள்ளது
இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்