nv ramana: நீதித்துறையில் காலியிடங்களை நிரப்பி சீர்திருத்தம் : முக்கிய வழக்குகளை மறந்த என்.வி.ரமணா

By Pothy RajFirst Published Aug 27, 2022, 1:30 PM IST
Highlights

நீதித்துறையில் நிர்வாக ரீதியாக முக்கியமான சீர்திருத்தங்களையும், காலியாக இருந்த நீதிபதிகள் பணியிடங்களையும் நிரப்பி நிர்வாகத்தை வேகப்படுத்தியதில் முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு முக்கியப் பங்கு உண்டு

நீதித்துறையில் நிர்வாக ரீதியாக முக்கியமான சீர்திருத்தங்களையும், காலியாக இருந்த நீதிபதிகள் பணியிடங்களையும் நிரப்பி நிர்வாகத்தை வேகப்படுத்தியதில் முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு முக்கியப் பங்கு உண்டு

ரமணாவின் பதவிக் காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகளும், மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றத்தில் 200க்கும் அதிகமான நீதிபதிகளும், 600க்கும் அதிகமான காலியிடங்களும் நிரப்பப்பட்டன. தேங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான வழக்குகளுக்கு விரைவாகத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளித்து காலியிடங்களை அக்கறையுடன் ரமணா நிரப்பினார்.

ரமணாவின் பதவிக்காலத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றச் சட்டத்தின் சில கூறுகளை மறு ஆய்வு செய்தல், பெகாசஸ் உளவுவிவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிட்டது, லக்கிம்பூர் கெரி வழக்கு போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தது.

narendra modi: பிரதமர் மோடி இன்றும், நாளையும் குஜராத் பயணம்: பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்

ஆனால், ரமணாவின் நிர்வாகத்தில் பெரிதாக எந்த முக்கியமான வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தில் 48-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட என்.வி.ரமணா, ஆந்திர மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் பொனாவரம் கிராமத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரமணா தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கும்போது உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 9 நீதிபதிகல் பணியிடங்கள் காலியாக இருந்தன. வழக்குகளின் தேக்கம் கருதி, 9 பணியிடங்களையும் நிரப்பினார். இதில் 9 பெண் நீதிபதிகள் அடங்கும். பல்வேறு பார்கவுன்சில் மற்றும் நீதிச்சேவைகளில் இருந்து 224 பேரைத் தேர்நவு செய்து நீதிமன்றப் பணிகளுக்கு ரமணா நியமித்தார்.இதில் 100க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற தலைமை அதிகாரிகளாகவும், தொழில்நுட்ப மற்றும் தீர்ப்பாய உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

என்.வி.ரமணாவின் நீதிபரிலாணத்தில் முக்கியமானது ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த தேசத்துரோகச் சட்டத்தை நிறுத்திவைத்ததாகும். சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களை அடக்க ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய இந்த சட்டம் இனி தேவையில்லை எனக் கூறி அந்த சட்டத்தில் எந்தவிதமான வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவி்ட்டார்

ரமணா தான் பதவிக்காலம் முடிய இருநாட்களுக்கு முன் சட்டவிரோதப்பணப்பரிமாற்ற சட்டத்தில் இரு முக்கியக் கூறுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

ghulam nabi azad: congress: மோடி வலை! குலாம் நபிக்காக மோடி கண்ணீர்விட்டபோதே முடிஞ்சது! ஆதிர் ரஞ்சன் விளாசல்

குஜாரத் கலவரத்தில் கூட்டுப்பலாத்காரம் செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்அரசுக்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி ரமணா உத்தரவிட்டார்.

கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி பஞ்சாப் சென்றுதிரும்பியபோது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பாகஅமைக்கப்பட்ட விசாரணைக் குழுஅறிக்கையின்படி நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு ரமணா உத்தரவிட்டார். இது தவிர பெகாசஸ் வழக்கு,பினாமி சட்டம், லக்கிம்பூரிகெரி சம்பவம் ஆகியவற்றிலும் விசாரணைக்கு ரமணா உத்தரவிட்டிருந்தார். தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையை 24லிருந்து 42 ஆக உயர்த்தியதும் ரமணாதான். 

நிர்வாக சீர்திருத்தங்கள், நீதிபதிகள் நியமனம் என நீதித்துறையின் பணியை விரைவுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை என்.விரமணா எடுத்துள்ளார். அதேநேரம், தலைமை நீதிபதியாக இருந்த இந்த 16 மாதத்தில் முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கவில்லை என்று பெரும் குறையாகும்.

குறிப்பாக காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து 2019ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 1,115 நாட்களாகியும் இன்னும் வழக்கு விசாரிக்க அரசியல் சாசன அமர்வு கூட உருவாக்கப்படவில்லை.

தேர்தல் பத்திரங்களுக்கு எதிராக கடந்த 2019ம் ஆண்டு  தொடரப்பட்ட வழக்கு இன்னும்  உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. ஏறக்குறைய 1,816 நாட்களாக இந்த வழக்கு கிடப்பில் இருக்கிறது. 
கர்நாடக அரசு கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து மாணவிகள் வரக்கூடாது என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு கடந்த 159 நாட்களாக விசாரிக்கப்படவில்லை. 

பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு 1,323 நாட்களாக நிலுவகையில் இருக்கிறது.

வெளியானது உலகில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியல்... மீண்டும் முதலிடத்தில் பிரதமர் மோடி!!

யுஏபிஏ- சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீண்டகாலமாக நிலுவகையில் இருக்கிறது. 35 மாதங்களாக இந்த வழக்கு ஒருமுறை மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் ரமணா எந்தவிதமான விசாரணையும் நடத்தவில்லை

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டவழக்கு கடந்த 987 நாட்களாக நிலுவையில் இருக்கிறது. இதுவரை 2 முறை மட்டுமே விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு கடந்த 31 மாதங்களாக விசாரணைக்கு எடுக்கப்படவில்லை. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரி்க்காமலேயே ரமணாவின் பதவிக்காலம் முடிந்தது

click me!