தீவிரவாதத்தை எந்த மதத்துடனும், தேசியத்துடனும், சமூகத்துடனும் தொடர்புபடுத்தக்கூடாது. தீவிரவாதத்தைவிட ஆபத்தானது அதற்கு நிதிஉதவி செய்வதுதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்
தீவிரவாதத்தை எந்த மதத்துடனும், தேசியத்துடனும், சமூகத்துடனும் தொடர்புபடுத்தக்கூடாது. தீவிரவாதத்தைவிட ஆபத்தானது அதற்கு நிதிஉதவி செய்வதுதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்
உள்துறை அமைச்சகம் சார்பில், தீவிரவாதத்துக்கு எதிராக நிதியுதவியைத் தடுத்தல் தொடர்பான மாநாடு டெல்லியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுப் பேசியதாவது:
மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம்… யார் அவர்?
தீவிரவாதத்தை எந்த மதத்தோடும், தேசியத்தோடும் சமூகத்தோடும் தொடர்புபடுத்தக்கூடாது.
தீவிரவாதிகள் தொடர்ந்து வன்முறையை நடத்துவதற்கும், இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றுவதற்கும், நிதி ஆதாரங்களை உருவாக்கவும், புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகிறார்கள்.
தீவிரவாதத்தைப் பரப்பவும், தங்கள் அடையாளங்களை மறைக்கவும் டார்க்நெட் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள்
உலகின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை சந்தேகத்திடமின்றி கூறலாம். ஆனால், தீவிரவாதத்தைவிட, தீவிரவாதத்துக்கு நிதிஅளிப்பதுதான் ஆபத்தானது என நான் நம்புகிறேன்.
தீவிரவாதம் உருவாவதும், வளர்க்கப்படும் நிதிஅளித்தல் மூலம்தான். தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதன் மூலம் உலக நாடுகளின் பொருளாதாரம் பலவீனமாகிறது.
தீவிரவாதத்தை எதிர்கொள்ளவும், பாதுகாப்பு கட்டமைப்பிலும், நிதி மற்றும் சட்ட அம்சங்களிலும் இந்தியா முன்னேற்றமடைந்துள்ளது. தீவிரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்தமா நாம் நடத்தும் போராட்டத்தை குறைத்து மதிப்பிடவும், அதற்கு தடை ஏற்படுத்தவும் சில நாடுகள் உள்ளன.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை செயல்படுத்தவில்லை: நிரூபித்தால் பதவி விலகுகிறேன்! கேரள ஆளுநர் சவால்
சில நாடுகள் தீவிரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கின்றன, பாதுகாக்கின்றன. தீவிரவாதியை பாதுகாப்பது என்பது தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு இணையானது. அத்தகைய நபர்கள் ஒருபோதும் அவர்களின் நோக்கத்தில் வெல்லக்கூடாது என்பது எங்களுடைய பொறுப்பாகும்
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்