அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு நாளை(19ம்தேதி) செல்லும் பிரதமர் மோடி, இட்டா நகரில் ரூ.560 கோடியில் கட்டப்பட்ட புதிய விமானநிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.
அருணாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு நாளை(19ம்தேதி) செல்லும் பிரதமர் மோடி, இட்டா நகரில் ரூ.560 கோடியில் கட்டப்பட்ட புதிய விமானநிலையத்தை தொடங்கி வைக்க உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதமர் மோடி 19ம்தேதி அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்துக்கும், உத்தரப்பிரதேசத்துக்கும் செல்கிறார். அருணாச்சலப் பிரதேசம் இடாநகரில் ரூ.560 கோடியில் உருவாக்கப்பட்ட டோனி போலோ விமானநிலையத்தை பிரதமர் மோடி முதலில் தொடங்கி வைக்கிறார்.
அருணாச்சல் பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள முதல் கிரீன்பீல்ட் விமானநிலையம் இதுவாகும். இந்த விமானநிலையம், 690 ஏக்கரில், ரூ.640 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு விமானம் தரையிறங்கவும், பறக்கவும் 2300 மீட்டர் ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.
விமானநிலையத்தின் அலுவலகக் கட்டிடம் மிகவும் நவீனமான முறையில் கட்டப்பட்டுள்ளது. செலவுகளைக் குறைக்கும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்தியும், காற்றாலை மின்வசதியுடனும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இடாநகர் விமானநிலையம் பிராந்தியங்களை மட்டும் இணைப்பது மட்டுமல்லாமல், சுற்றுலா மற்றும் வர்த்தகத்தையும் வளர்ச்சி அடையச் செய்யும்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை செயல்படுத்தவில்லை: நிரூபித்தால் பதவி விலகுகிறேன்! கேரள ஆளுநர் சவால்
விமானநிலையத்தை திறந்துவைத்தபின், பிரதமர் மோடி 600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் கெமங் நீர்மின்சக்தி திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கஉள்ளார். அருணாச்சலப்பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் ரூ.8450 கோடியில் இந்த நீர் மின்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் அருணாச்சலப்பிரதேசத்துக்கு மின்சாரம் உபரியாகவும், தேசிய கிரிட்டுக்கு கூடுதலான மின்சாரம் கிடைக்கும். பசுமை வழி மின்உற்பத்தி எனும்மத்திய அரசின் இலக்கிற்கு இந்த மின்திட்டம் கூடுதலாக வலு சேர்க்கும்.
அருணாச்சலப்பிரதேசத்தில் தனது நிகழ்ச்சிகளை முடிக்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து, உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசிக்கு செல்கிறார். அங்கு பிற்பகல் 2 மணி அளவில் நடக்கும் காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை முறைப்படி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் நியமனம்… யார் அவர்?
காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி 17ம் தேதி தொடங்கினாலும், முறைப்படி நாளைதான் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சி டிசம்பர் 17ம் தேதி வரை நடக்கும். தமிழகத்தில் இருந்து 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.