ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை, சார்பானவர்களை பதவியில் நியமித்ததாக ஒரு சம்பவதத்தை எடுத்துக்காட்டினால், ஆளுநர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சவால் விடுத்துள்ளார்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை, சார்பானவர்களை பதவியில் நியமித்ததாக ஒரு சம்பவதத்தை எடுத்துக்காட்டினால், ஆளுநர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சவால் விடுத்துள்ளார்.
கேரளாவுக்கு ஆளுநராக ஆரிப் முகமது ஆரிப் கான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டார். ஆரிப் கான் நியமிக்கப்பட்டதில் இருந்து, கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயகக் கூட்டணி அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார். கேரளஅரசுக்கும், ஆளுநருக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல் ஏற்பட்டது.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ராவில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் இணைந்தார்
சமீபத்தில் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் ஆளுநர் ஆரிப் கானுக்கும், கேரள அரசுக்கும் இடையிலான மோதல் விஸ்வரூமெடுத்து. இரு தரப்பினரும் கடுமையாக விமர்சித்தனர். பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கி கேரள அரசு அவசரச்சட்டமும் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் கேரள ஆளுநர் முகமது ஆரிப் கான் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
என்னுடைய பதவியை தவறாகப் பயன்படுத்துவதாகவும், அரசியலாக்குவதாகவும் குற்றச்சாட்டு கூறுகிறார்கள். நான் வகிக்கும் இந்தப் பதவியில் எங்கு அரசியல்செய்தேன். கடந்த 3 ஆண்டுகளில் எந்த இடத்திலாவது ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை செயல்படுத்தி இருக்கிறேனா.
அரசியல் ரீதியாக உங்களுக்கு தொல்லை தரும் ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சேர்ந்த ஒருவரை நான் நியமித்ததற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்லுங்கள். என் பெயரை, அதிகாரத்தை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ், பாஜகவினரை பல்கலைக்கழகத்தில் நான் சேர்த்திருக்கேனா. அவ்வாறு இருந்தால் சொல்லுங்கள், நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்.
இதுபோன்ள செயல்கள் அரசியலாக்கப்படலாம். ஒருவர் இவ்வாறுகூட செய்யலாம். ஆனால் நான் இவ்வாறு செய்யவும் இல்லை, இதை செய்யக்கூறி என் மீது எந்த அழுத்தமும் வரவில்லை.
கடந்த மாதம் கேரள நிதிஅமைச்சர் எனக்கு எதிராக பல்வேறு கருத்துகக்ளைத் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் பிறந்த ஒருவரால், கேரளமாநிலத்தின் கல்வி முறையை எவ்வாறு அறியமுடியும் என்று கேரள நிதிஅமைச்சர் பேசினார். மதவாதத்தையும், மாநிலவாதத்தையும் வளர்க்க நிதிஅமைச்சர் முயன்றார். இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், ஒருமைப்பாட்டுக்கும் சவால் விடுத்தார்
கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து நீக்கம்: பினராயி அரசு அதிரடி
யாரேனும் கேரளாவைச் சேர்ந்தவராக இருந்தால், மாநிலவாதத்தை வளர்க்க முயற்சிக்கிறாரக்ள், இது ல் கேரளாவுக்கு வெளியே பணியாற்றுபவர்களை எவ்வாறு பாதிக்கும். இவ்வாறு பேசிய அமைச்சர் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். அவரை நீக்க எனக்கு அதிகாரம் இல்லை. இது முதல்வரின் தேர்வுக்கு உட்பட்டது, கேரள மக்களின் விருப்பத்துக்குரியது. என்னுடைய அதிகாரத்துக்கு உட்பட்டதுவரை நான் செய்துவிட்டேன், கேரள மக்களின் நலனை முன்னிறுத்திதான் பதவிப்பிரமாணம் செய்திருக்கிறேன்.
இவ்வாறு ஆரிப் முகமது கான் தெரிவித்தார்