காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணத்தில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியும் இன்று இணைந்தார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணத்தில் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியும் இன்று இணைந்தார்.
மகாராஷ்டிராவில் உள்ள புல்தானா மாவட்டத்தில் உள்ள ஷேகான் எனும் பகுதியில் ராகுல் காந்தி நடைபயணத்தின் போது துஷார் காந்திஅவருடன் இணைந்து நடந்தார்.
முற்றும் சவார்க்கர் விவகாரம்: ராகுல் காந்தி மீது மகாராஷ்டிரா போலீஸார் வழக்குப்பதிவு
ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த 7ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்துக்குள் நுழைந்தது. அகோல மாவட்டத்தில் உள்ள பாலாபூரில் இன்று காலை 6 மணிக்கு ராகுல் காந்தி நடை பயணத்தைத் தொடங்கினார். நடைபயணம்,தொடங்கி சில மணிநேரத்தில் ஷேகான் பகுதிக்கு வந்தபோது ராகுல் காந்தியுடன் துஷார் காந்தியும் இணைந்தார்
देश संकट में हो और गांधी-नेहरू कंधे से कंधा मिलाकर न निकलें- ये संभव नहीं है।
आज़ादी के आंदोलन से भारत जोड़ने के आंदोलन तक का सफर गवाह है... देश को तब आज़ादी दिलाई थी और देश को आज जोड़कर दिखाएंगे। और महात्मा गांधी के प्रपौत्र तुषार गांधी... pic.twitter.com/AuKrOa0k9A
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 18ம் தேதி ஷேகானில் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இணைகிறேன். ஷேகான்தான் நான் பிறந்தஇடம். நாக்பூருக்கு ஹவுரா மெயில் ரயிலில் என் தாயார் சென்றபோது, ஷேகான் ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது 1960ம் ஆண்டுஜனவரி 17ம் தேதி நான் பிறந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றது வரலாற்றுச் சிறப்பு என்று காங்கிரஸ் கட்சி புகழாரம் சூட்டியுள்ளது.
சவார்க்கர் விவகாரத்தில் முட்டிக்கொண்ட ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரே! கூட்டணி அவ்வளவுதானா!
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அறிக்கையில் “ ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரனும், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனும் சேர்ந்து நடப்பது என்பது, ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையாகும். ஜனநாயகத்தை அச்சுறுத்தலில் வைக்கலாம், ஆனால், அதை அழிக்க அனுமதிக்கமாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளது.
दररोज सकाळी... उत्साही pic.twitter.com/nXV2L5GHvC
— Congress (@INCIndia)துஷார் காந்தியைத் தவிர்த்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், தீபிந்தர் ஹூடா, மிலிந்த் தியோரா, மாணிக்ராவ் தாக்ரே, மும்பை காங்கிரஸ் தலைவர் பாய் ஜெக்தீப், மாநிலத் தலைவர் நானா படோல் ஆகியோரும் உடன் நடைபயணத்தில் பங்கேற்றனர்.