Rahul Savarkar:முற்றும் சவார்க்கர் விவகாரம்: ராகுல் காந்தி மீது மகாராஷ்டிரா போலீஸார் வழக்குப்பதிவு

By Pothy RajFirst Published Nov 18, 2022, 12:15 PM IST
Highlights

இந்துத்துவா தலைவர் வீரசவார்க்கர் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவதூறாகப் பேசியதையடுத்து, அவர் மீது மகாராஷ்டிரா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்துத்துவா தலைவர் வீரசவார்க்கர் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அவதூறாகப் பேசியதையடுத்து, அவர் மீது மகாராஷ்டிரா போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மும்பையின் தானே நகர் காவல்நிலையத்தில் பாலசாஹேபஞ்சி சிவசேனா கட்சித் தலைவர் வந்தனா டோங்கரே அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி மீது போலீஸார் ஐபிசி 500, 501 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ராகுல் காந்தியின் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையில் நடிகை ரியா சென் பங்கேற்பு

மகாராஷ்டிராவில் தற்போது பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார். அகோலா நகரில் நேற்றுமுன்தினம் ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் “ சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு சவார்க்கர்உதவி செய்தார்.

சிறையில் இருந்தபோது, அங்கிருந்து வெளியே வருவதற்கு  மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்துதான் சவார்க்கர் வெளியேறினார். உங்களின் ஒழுங்கான வேலையாள் எழுதி சவார்க்கர் ஆங்கிலேயரிடம் கையொப்பமிட்டுள்ளார். நேரு, வல்லபாய் படேல் சிறையில் இருந்தபோது அவர்கள் இதுபோன்ற எந்தக் கடிதத்தையும் எழுதிக் கொடுக்கவில்லை. ஆங்கிலேயரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து வெளியேவந்த சவார்க்கர்தான் பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தலைவர்.  ” எனத் தெரிவித்தார்.

சவார்க்கர் விவகாரத்தில் முட்டிக்கொண்ட ராகுல் காந்தி, உத்தவ் தாக்கரே! கூட்டணி அவ்வளவுதானா!

ராகுல் காந்தியின் கருத்துக்கு மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் சிவசேனா, காங்கிரஸ் இருந்தபோதிலும் ராகுல் காந்தி சவார்க்கர் குறித்து பேசிய கருத்துக்கு உத்தவ் தாக்கரேயும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ராகுல் காந்தி மீது தானே நகர் காவல்நிலையத்தில் பாலசாஹேபஞ்சி சிவசேனா கட்சித் தலைவர் வந்தனா டோங்கரே அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

பாலசாஹேபஞ்சி சிவசேனா கட்சித் தலைவர் வந்தனா டோங்கரே கூறுகையில் “ எங்கள் மாநிலத்தின் தலைசிறந்த மனிதரான சவார்க்கரை அவமானத்பபடுத்தும்போது பொறுமையாக இருக்கமாட்டோம். ராகுல் காந்தி தனது பாரத் ஜோடோ யாத்திரையின்போது, சவார்க்கர் குறித்து பேசிய கருத்துக்கள் அனைத்தும் எங்களை வேதனைப்படுத்துகின்றன, மக்களின் மனதையும் காயப்படுத்திவிட்டது. மகாராஷ்டிரா மண்ணின் சிறந்த மனிதரை அவமானப்படுத்துவதை பார்த்து பொறுமையாக இருக்கமாட்டோம்” எனத் தெரிவித்தார்

சவார்க்கரை அவமதித்துவிட்டார்! ராகுல் காந்தி மீது சவார்க்கர் பேரன் போலீஸில் புகார்

இதற்கிடையே ராகுல் காந்தியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து தானே நகரில் பாலசாஹேப் சிவசேனா கட்சி கண்டனப் பேரணியும் நேற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.

click me!