
சுதந்திர இந்தியாவின் அடையாளமாக திகழும் இந்திய தேசியக் கொடியானது, பல்வேறு தலைவர்கள், லட்சக்கணக்கான மக்களின் போராட்டத்திற்கு பிறகு, முதன் முதலில் ஆகஸ்ட் 15, 1947ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் ஏற்றப்பட்டது. போராடி பெற்ற சுதந்திரத்தின் அடையாளமாகவும், நாட்டிற்காக தன் இன்னுயிரை நீத்த தியாகிகளை போற்றும் நினைவாகவும் உருவானதே, நம் இந்திய தேசியக் கொடி ஆகும்.
தேசியக் கொடியில் காவி, வெண்மை, பச்சை என மூன்று வண்ணங்கள் உள்ளதால், மூவர்ணக்கொடி என்று அழைக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் பலர் பல தியாகங்கள் செய்து கிடைத்த இந்த சுதந்திர தினம் நிச்சயம் நாம் கொண்டாடப்பட வேண்டியதே. 1757களில் இந்தியாவிற்குள் பிரிட்டிஷ் காரர்கள் வணிகம் செய்ய நுழைந்து பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்ற நிறுவனத்தை உருவாக்கினர். அவர்கள் நாட்டில் தயார் செய்யப்பட்ட பல பொருட்களை இந்தியர்களுக்கு விற்பனை செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு..எது தாழ்ந்த சாதி ? சர்ச்சையில் சிக்கிய பெரியார் பல்கலை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு !
கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள் இந்தியாவையே கைப்பற்றி 1858 முதல் இந்தியாவை பிரிட்டிஷ் அரசின் காலனி நாடாக மாற்றி ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். இந்தியர்களை அடிமைகளாக பயன்படுத்தினர். இதனால் எழுந்த கிளர்ச்சியால் இந்தியர்களுக்கு சுதந்திர தாகம் பிறந்தது. இந்தியா சுதந்திரம் அடைய பலர் போராட்டம் நடத்தி இந்தியா 1947ல் விடுதலையடைந்தது.
இந்நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவர் வெளியிட்ட அறிவிப்பு ஆனது, ‘ சுதந்திர தினத்தின் 75வது ஆண்டு என்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த ஆண்டு சுதந்திர தினம் சிறப்பு நிகழ்ச்சியாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் போது செய்வது போல் சிறப்பு சுகாதார இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றும், இதை தேசிய பொது இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் டி.எஸ்.மிஸ்ரா கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..மீண்டும் அதிமுகவில் சேர்கிறார் ஓபிஎஸ்? பதறிய எஸ்.பி வேலுமணி.. இதுதான் ஒரே வழி!
சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் தொடர்புடைய இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். சுதந்திர தின வாரத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். சுதந்திர தின விழாவை வெறும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல், மக்கள் அதில் பங்கேற்க வேண்டும். அனைத்து மக்களும் சமூக அமைப்புகள், பொதுப் பிரதிநிதிகள், என்சிசி மற்றும் என்எஸ்ஓ கேடட்கள், வர்த்தக அமைப்புகள் போன்ற துறைகள் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..மெட்ரோ ரயிலில் இளைஞனுக்கு ‘தர்ம அடி’ போட்ட இளம்பெண்..வைரல் வீடியோ - எதற்கு தெரியுமா ?