டிஜிட்டல் ஊடகங்களுக்கும் கடிவாளம்: மத்திய அரசு சுறுசுறுப்பு

Published : Jul 15, 2022, 06:03 PM IST
டிஜிட்டல் ஊடகங்களுக்கும் கடிவாளம்: மத்திய அரசு சுறுசுறுப்பு

சுருக்கம்

இந்தியாவில் உள்ள டிஜிட்டல் ஊடகங்களை நெறிமுறைப்படுத்துவதற்காகவும், விதிமுறை மீறிலில் ஈடுபட்டால், நடவடிக்கையை எதிர்கொள்ளவும் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர இருக்கிறது.

இந்தியாவில் உள்ள டிஜிட்டல் ஊடகங்களை நெறிமுறைப்படுத்தவும், விதிமுறை மீறிலில் ஈடுபட்டால், நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர இருக்கிறது.

அடுத்தவாரம் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத் தொடரில் இதற்கான சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவரும் எனத் தெரிகிறது. எந்தவிதமான சட்டத்திலும் டிஜிட்டல் ஊடகங்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து எந்தவிதமான குறிப்புகளும்இல்லை. ஆதலால், முதல்முறையாக டிஜி்ட்டல் ஊடகத்துக்காகவே வரைமுறைகளை மத்தியஅரசு கொண்டு வருகிறது.

அச்சுஊடகப் பதிவுமுறை மற்றும் பீரியாடிக்கல் மசோதாவில் கொண்டுவரப்படும் சட்டத்திருத்தம் செய்திகளை வெளியிடும் எந்த டிஜிட்டல் ஊடகத்தையும் உள்ளடக்கியதாக சட்டத்திருத்தம் இருக்கும். இதற்கான பூர்வாங்கப் பணிகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைஅமைச்சகம் தொடங்கிவிட்டது.

ரூபாய் மதிப்புச் சரிவு மார்க்கதர்ஷக் மண்டல் வயதைக் கடந்துவிட்டது: காங்கிரஸ் கட்சி கிண்டல்

இதன்படி டிஜிட்டல் ஊடகங்கங்கள் நடத்துவோர் பதிவுச்சான்றுக்கான விண்ணப்பிக்க வேண்டும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் 90 நாட்களுக்குள் பதிவு செய்திருக்க வேண்டும். குறிப்பாக பிரஸ் ரிஜிஸ்டர் ஜெனரலில் டிஜிட்டல் ஊடகங்கள் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

இந்த பிரஸ் ரிஜிஸ்டர் ஜெனரல்தான், ஊடகங்கள் விதிமுறை மீறலில் ஈடுபட்டால், அவற்றை சஸ்பெண்ட் செய்யவும், பதிவை ரத்து செய்யவும், அபராதம் விதிக்கவும் அதிகாரம் கொண்டவையாகும்.

இந்த மசோதாவுக்கு இன்னும் பிரதமர் அலுவலகம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டால், டிஜிட்டல் ஊடகங்கள அனைத்தும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைஅமைச்சகத்தின் கீழ் வந்துவிடும்.

பணக்காரராக இருக்க பிடிக்கவில்லை! சொத்துக்கள் அனைத்தையும் அறக்கட்டளைக்கு வழங்கும் பில் கேட்ஸ்

2019ம் ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகள் கீழ் டிஜிட்டல் மீடியாக்களை கொண்டுவர முயற்சிக்கப்பட்டது. ஆனால், அது சர்ச்சையில் முடிந்தது. ஏற்கெனவே வரைவு மசோதாவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது,

இஸ்ரேல் ஹைபா துறைமுகம்: 120 கோடி டாலருக்கு வாங்கியது அதானி குழுமம்

அதில், செய்தி வெளியிடும் டிஜிட்டல் மீடியா என்பது, செய்திகளை டிஜிட்டல் வடிவத்தில் வெளியிட்டு,அதை  இன்டர்நெட், கம்ப்யூட்டர் நெட்வொர்க் மூலம் பரப்புதல், டெக்ஸ்ட், வீடியோ, ஆடியோ, கிராபிக்ஸ் மூலம் கொண்டு செல்லுதல்” எனத் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?
அதிர்ச்சி செய்தி! கோவா நைட் கிளப்பில் சிலிண்டர் வெடிப்பு – 23 பேர் பலியான சோகம்