மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என்பதை இந்திய ரயில்வே உறுதி செய்துள்ளது.
கொரோனா தொற்று காலத்தில், மூத்த குடிமக்களுக்கான பயணச் சலுகைகளை இந்திய ரயில்வே நிறுத்தி வைத்தது. கொரோனா முடிந்து இயல்பு நிலை திரும்பி பிறகு மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டனத்தில் மீண்டும் சலுகை வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து பாராளுமன்றத்தில் அமளியில் கூட ஈடுபட்டனர். ஆனால் மத்திய அரசு, மீண்டும் மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகையை வழங்க முடியாது என்று உறுதிபட தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது என்பதை இந்திய ரயில்வே உறுதி செய்துள்ளது... பல்வேறு அமைப்புகள் மற்றும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட இந்த பிரச்சனையை எழுப்பி, இந்த சலுகைகளை திரும்பப் பெற வேண்டும் என்று வாதிட்ட பல முறையீடுகளுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பல்வேறு தரப்பின் பரிசீலித்த அரசு, பயணிகளுக்கான கட்டண தள்ளுபடியை மீண்டும் வழங்க வேண்டாம் என்று முடிவு இந்திய ரயில்வே செய்துள்ளது. கொரோனாவுக்கு முன்னர், 58 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கட்டண தள்ளுபடி பெற்று வந்த நிலையில், அந்த தள்ளுபடியை மீண்டும் வழங்க வேண்டாம் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் இதுகுறித்து பேசிய போது “ ரயில் டிக்கெட் விலையில், ரயில்வே ஏற்கனவே குறிப்பிடத்தக்க மானியத்தை வழங்குகிறது, ₹100 மதிப்புள்ள டிக்கெட்டுகளை வெறும் ₹55க்கு ரயில்வே வழங்குகிறது. ரயில்வே டிக்கெட்டுகளுக்கு மானியம் வழங்கி வருவதாகவும், இந்த நடைமுறை தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார். இருப்பினும், இந்த மானியங்களுக்கு அப்பால் கூடுதல் தள்ளுபடி வழங்குவது சாத்தியமற்றது என்று அவர் கூறியிருந்தார்.
தென் மாவட்டங்களுக்கு இன்னொரு சிறப்பு ரயில்! தீபாவளியை முன்னிட்டு தெற்கு ரயில்வே அறிவிப்பு
பொது கட்டண சலுகை மறுசீரமைக்கப்படுவது நிராகரிக்கப்பட்டாலும், புற்றுநோய் போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரயில்வே விதிவிலக்கு அளித்துள்ளது, அவர்கள் தொடர்ந்து கட்டணச் சலுகைகளைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பயண அனுபவங்களில் வசதியை உறுதிசெய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. அதாவது, எந்தவிதக் கூடுதல் கட்டணமும் இன்றி, முதியோர் மற்றும் பெண்களுக்கு லோயர் பெர்த் அளிப்பது போன்ற வசதிகளை நோயாளிகளுக்கும் மேம்படுத்த முடிவு செய்துள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.