parliament: நாடாளுமன்ற வளாகத்தில் போரட்டம், தர்ணா, உண்ணாவிரதத்துக்கு தடை: மாநிலங்களவை செயலாளர் உத்தரவு

By Pothy RajFirst Published Jul 15, 2022, 12:20 PM IST
Highlights

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், தர்ணாக்கள், உண்ணாவிரதங்கள், மதரீதியான விழாக்கள் நடத்த தடைவிதிக்கப்படுகிறது என்று மாநிலங்களவைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம், தர்ணாக்கள், உண்ணாவிரதங்கள், மதரீதியான விழாக்கள் நடத்த தடைவிதிக்கப்படுகிறது என்று மாநிலங்களவைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் சில குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர் வரும் 18ம் தேதி தொடங்கும்போது, போராட்டம், தர்ணாக்கள் செய்யக்கூடும் என்பதால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் மதிப்புச் சரிவு மார்க்கதர்ஷக் மண்டல் வயதைக் கடந்துவிட்டது: காங்கிரஸ் கட்சி கிண்டல்

மாநிலங்களவை பொதுச்செயாலாளர் பி.சி.மோடி வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நாடாளுமன்ற மழைக்காலக்கூட்டத் தொடர்வரும் 18ம் தேதி தொடங்குகிறது. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்கள் யாரும் போராட்டம் நடத்தவோ, உண்ணாவிரதம் இருக்கவோ, தர்ணாப் போராட்டம் செய்யவோ,மதரீதியான விழாக்கள் நடத்தவோ அனுமதியில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தலைமைப் பொருளாதார ஜோதிடரை நியமியுங்கள்: நிர்மலாவை வம்பிழுத்த ப.சிதம்பரம்

இதற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயாளரும், தலைமைக் கொறாடாவான ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ விஷ்குருவின் சமீபத்திய முடிவு யாரும் தர்ணா செய்யக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் மத்திய அரசுக்கு எதிராக அதிருப்திகள் ஏதும் இருந்தால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்குள் போராட்டம்நடத்துவார்கள், மகாத்மா காந்தி சிலைஅருகே போராட்டம் நடத்துவார்கள். இனிமேல் அதுபோல் செய்ய முடியாது.

சங்கி மட்டும் இல்லை ஆனா துரோகம், ஊழல், நாடகம் இருக்குது; வம்பு இழுத்த மஹூவா மொய்த்ரா
நாடாளுமன்றத்துக்குள் பயன்படுத்தக்கூடாத சொற்கள் என்று பட்டியலிடப்பட்டு வெளியிட்டப்பட்டன. இதைக் கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சிகள், பாஜக அரசு தங்களுக்கு எதிரான சொற்கள் அனைத்தையுமே, தடைவிதிக்கப்பட்ட சொற்களாகவே மாற்றிவிட்டது, இந்தியாவை சிறிது சிறிதாக அழிக்கிறது என விமர்சித்தன.

ஆனால், இதற்கு பதில் அளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “ நாடாளுமன்றத்துக்குள் எந்தவிதமான சொற்களையும் பயன்படுத்த தடையில்லை. உறுப்பினர்கள் தங்கள் கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம்” எனத் தெரிவித்தார்.

click me!