கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் சமீபகாலமாக வேகமாக பரவி வருகிறது. தற்போது 50க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் இந்தியா, சர்வதேச நாடுகளிலிருந்து வருபவர்களை விமான நிலையம், துரைமுகம் நாட்டில் எல்லைகளில் தடுத்து நிறுத்தி பரிசோதித்து வருகிறது.
இதையும் படிங்க: அய்யோ தமிழக மக்களே உஷார்... கேரளாவுக்குள் நுழைந்தது மங்கி பாக்ஸ்..? மக்கள் பீதி.
இந்த நோய்க்கான அறிகுறிகள் இருப்பின் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து பீகார் மாநிலம் வந்த மாணவி ஒருவருக்கு மங்கி பாக்ஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் அந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்துடன், அவரின் உடலில் இருந்து மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதேபோல் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கும் மங்கி பாக்ஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்த நபர் என்பதால் அவருக்கு இந்த அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவரை மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர்.
ரூ.1000 கோடிக்கு மருத்துவர்களுக்கு இலவசங்கள்: ஐடி ரெய்டில் டோலோ 650 தயாரிப்பு நிறுவன மோசடி அம்பலம்
இந்த நிலையில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையங்களில் பரிசோதனை செய்ய வேண்டும். குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால் இணை நோய் உள்ளவர்கள் உடனே சிகிச்சை பெற வேண்டும். குரங்கு அம்மை சிகிச்சைக்கு தேவையான சுகாதார கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி தென்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியிருந்த நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.