பங்குச்சந்தை ஊழல் விவகாரம்... சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 4 நாட்கள் அமலாக்கத்துறை காவல்!!

Published : Jul 14, 2022, 05:40 PM IST
பங்குச்சந்தை ஊழல் விவகாரம்... சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 4 நாட்கள் அமலாக்கத்துறை காவல்!!

சுருக்கம்

பங்குசந்தை ஊழல் தொடர்பான வழக்கில் என்எஸ்இ முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவை 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

பங்குசந்தை ஊழல் தொடர்பான வழக்கில் என்எஸ்இ முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவை 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 20 வருடங்களாக அடையாளம் தெரியாத இமயமலை சாமியார் ஒருவருக்கு மின்னஞ்சல் மூலம் பல்வேறு முக்கியமான தரவுகளைப் பகிர்ந்ததோடு மட்டுமில்லாமல் தனக்கு கீழ் இருக்கும் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கொடுக்க வேண்டும், யாருக்குப் பதவி உயர்வு அளிக்க வேண்டும், யாரை வேறு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்பது போன்ற அனைத்து முடிவுகளையும் சாமியார் கட்டளைப்படியே நிறைவேற்றியுள்ளார். இது பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி அமைப்பின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:  என்எஸ்இ ஒட்டுக்கேட்பு விவகாரம்: தொடர் சிக்கலில் சித்ரா: அமலாக்கப் பிரிவு புதிய வழக்கு

துமட்டுமின்றி சாமியார் உத்தரவின் பெயரில் தான் சித்ரா ராமகிருஷ்ணா, பால்மர் லாரி நிறுவனத்தில் வெறும் 15 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த ஆனந்த் சுப்ரமணியனை ஜனவரி 18, 2013ல் 1.68 கோடி ரூபாய் சம்பளத்தில் தேசிய பங்குச்சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக நியமித்தார். ஆனந்த் சுப்பிரமணியத்தை விதிகளை மீறி தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமித்ததாகவும் குற்றசாட்டு எழுந்தது. தொடர்ந்து, தேசிய பங்குச்சந்தையின் விதிகளிலேயே முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு ஏற்கனவே இருந்து வந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு செபி, தேசியபங்குச்சந்தை மற்றும் சித்ரா ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு அபராதமும் விதித்தது.

இதையும் படிங்க: தலைமைப் பொருளாதார ஜோதிடரை நியமியுங்கள்: நிர்மலாவை வம்பிழுத்த ப.சிதம்பரம்

இதனை தொடர்ந்து தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணனின் இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மறுபுறம் சித்ரா ராமகிருஷ்ணன் மீதான புகார்கள் குறித்து பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரித்து வந்தது. பின்னர் இந்த வழக்குகள் தொடர்பாக தேசிய பங்குச்சந்தை முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவை சிபிஐ கைது செய்தது. இந்த நிலையில் தற்போது அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியுள்ளது. டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணாவை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆர்எஸ்எஸ் நீதிபதி.. நாடாளுமன்றத்தில் வார்த்தையை விட்ட டி.ஆர்.பாலு..! பொங்கியெழுந்த பாஜக எம்.பி.க்கள்!
நாடாளுமன்றம் வரை சென்ற திருப்பரங்குன்றம்..! டெல்லியிலும் புயலை கிளப்பும் திமுக!