பிரதமர் பதவி வேண்டும் என்பதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் கைகோர்த்துக்கொண்டு பாஜகவின் முதுகில் நிதிஷ் குமார் குத்திவிட்டார் என்று பாஜக மூத்த தலைவரும்,உள்துறை அமைச்சருமான அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
பிரதமர் பதவி வேண்டும் என்பதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் கைகோர்த்துக்கொண்டு பாஜகவின் முதுகில் நிதிஷ் குமார் குத்திவிட்டார் என்று பாஜக மூத்த தலைவரும்,உள்துறை அமைச்சருமான அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
பீகாரில் பாஜக-நிதிஷ் குமார் ஆட்சி நடந்தது வந்தது. ஆனால், பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகியது. இதையடுத்து, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸுடன் இணைந்து நிதிஷ் குமார்ஆட்சி அமைத்து முதல்வராகியுள்ளார்.
சர்தார் சரோவர் அணை கட்டுமானப் பணியை நிறுத்திய ‘நகர்புற நக்சல்கள்’: பிரதமர் மோடி கடும் சாடல்
பீகாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் முதல்முறையாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அங்கு இன்று பயணம் செய்துள்ளார். சீமாஞ்சல் பகுதியில் புர்னியா மாவட்டத்தில் புர்னியா நகரில் இன்று மக்கள் உணர்ச்சிகள் என்ற பெயரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது:
பிரதமராக வேண்டும் என்ற கனவில், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டு பாஜகவின் முதுகில் நிதிஷ் குமார் குத்திவிட்டார். ஆனால், தந்திரமான இந்த அரசியலில் நிதிஷ் குமாரின் பிரதமராகும் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
பாஜகவுக்கு துரோகம் செய்துவிட்டு, நிதிஷ் குமார் லாலுபிரசாத் மடியில் அமர்ந்துவிட்டார். ஆனால், நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் லாலுஜி. நிதிஷ் குமார் உங்களுக்கு மீண்டும் துரோகம் செய்வார், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து தனது பிரதமரர் கனவை நிறைவேற்றிக்கொள்வார். ஆட்சி அதிகாரத்துக்காக எங்கு வேண்டுமானாலும் நிதிஷ் குமார் செல்வார். அவரின் ஒரே கொள்கை நாற்காலி, அதை பாதுகாக்க வேண்டும்.
கேரள-வில் பிஎப்ஐ நடத்தும் ஹர்தாலில் பயங்கர வன்முறை: பலர் காயம்: பேருந்து மீது கல்வீச்சு
பீகார் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி குறைவான இடங்களை வென்றபோதிலும், பிரதமர் மோடியின் பரந்த மனப்பான்மையால், பாஜக உங்களுக்கு முதல்வர் பதவி அளித்தது.
2024ம்ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் நிதிஷ் குமார், லாலு கூட்டணி முடிவுக்கு வந்துவிடும். 2025ம் ஆண்டில் பீகாரில் பாஜக ஆட்சி அமைக்கும்.
துரோகம் செய்வது நிதிஷ் குமார் பழக்கம், இப்போது யார் அவரை நம்புவார்கள். மாட்டுத்தீவன ஊழலில் லாலுபிரசாத் யாதவ் குற்றம்நிரூபிக்கப்பட்டவர், லாலுவின் ஆட்சி காட்டாட்சி, சாதிக் கலவரம் நிறைந்த ஆட்சி. அந்தஆட்சி உங்களுக்கு வேண்டுமா மக்களே. லாலுஜி உங்கள் ஆட்சியில் நிர்வாகம் எவ்வாறு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
சீமாஞ்சல் பகுதி முன்னேற்றத்துக்காக ரூ.1.38 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ஏராளமான நலத்திட்டங்களை சீமாஞ்சல் பகுதிக்கு பிரதமர் மோடி செய்துள்ளார். முதல்வர் நிதிஷ் குமார் என்ன செய்துள்ளார்.
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா: கேரள உயர் நீதிமன்றம் விளாசல்
அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். நரேந்திர மோடி, அல்லது ராகுல் காந்தி. பீகாரில் பாஜகவுக்கு முழுப்பெரும்பான்மை அளித்தால் மாநிலம் வளர்ச்சி அடையும். நாட்டிலே வளர்ச்சி அடைந்த மாநிலமாக உயர்த்துவோம்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்