டெல்லியில் கொட்டித் தீர்த்த பேய் மழை ! செப்டம்பர் மழையில் பாதி, 24 மணிநேரத்தில் பதிவு!

By Thanalakshmi V  |  First Published Sep 23, 2022, 4:17 PM IST

டெல்லியில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 72 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது.  செபடம்பர் மாதத்தில் கிட்டதட்ட 20 நாட்கள் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. 
 


டெல்லியில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 72 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது.  செபடம்பர் மாதத்தில் கிட்டதட்ட 20 நாட்கள் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. 

இதனால் முக்கிய சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தலைநகர் டெல்லியில் செப்டம்பர் மாதத்தில் இதுவரை 130 மி.மீ அளவு மழை பொழிந்துள்ளது. வழக்கமாக 125 மி.மீ அளவு மழைப்பொழிவு இருக்கும் என்று டெல்லி முதன்மை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் படிக்க:bharat jodo yatra: rahul: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா: கேரள உயர் நீதிமன்றம் விளாசல்

வழக்கமான அளவை விட 5 மி.மீ அதிகமாக மழையின் அளவு பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால், இந்த அளவு அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செப்டம்பர் 1 முதல் 22 ஆம் தேதி காலை வரையிலான நிலவரப்படி ஒட்டுமொத்தமாக பெய்த மழையின் அளவு 58.5 மி.மீ ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இது வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் பெய்யும் மழையில் அளவை விட 50 மி.மீ குறைவு. 

ஆனால் நேற்று  ஒரே நாளில் 72 மி.மீ மழை பெய்துள்ளதால், இந்த மாதத்தில் இதுவரை( 1 - 23 ஆம் தேதி வரை) 130.5 மி.மீ மழை பொழிந்துள்ளது. அதிகபட்சமாக புசா மற்றும் பாலம் ஆகிய இடங்களில் 106.2 மி.மீ., 102 மி.மீ மழையின் அளவு பதிவாகியுள்ளது. 

மேலும் படிக்க:harthal in kerala:கேரள-வில் பிஎப்ஐ நடத்தும் ஹர்தாலில் பயங்கர வன்முறை: பலர் காயம்: பேருந்து மீது கல்வீச்சு

மேற்கு திசை காற்று மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேன்மேற்கு பருவமழை காரணமாக டெல்லியில் கடந்த ஜுலை 1 ஆம் தேதி கனமழை பெய்தது. அப்போது மழையின் அளவு 117.2 மி.மீ ஆக பதிவானது. 

அதன் பிறகு தற்போது தான் தலைநகரில் கனமழை பெய்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் வரும் நாட்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக, டெல்லியில் மழைப்பொழிவு பற்றாக்குறை 35 %யிலிருந்து 23 % ஆக குறைந்துள்ளது. 
 

click me!