pm narendra modi: சர்தார் சரோவர் அணை கட்டுமானப் பணியை நிறுத்திய ‘நகர்புற நக்சல்கள்’: பிரதமர் மோடி கடும் சாடல்

By Pothy RajFirst Published Sep 23, 2022, 3:42 PM IST
Highlights

குஜராத்தில் நர்மதை நதியின் குறுக்கே சர்தார் சரோவர் அணையை கட்டிமுடிக்கவிடாமல், சுற்றச்சுழலுக்கு கேடு எனக் கூறி பல ஆண்டுகளாக நகர்ப்புற நக்சல்கள் பணியை நறுத்திவைத்தனர் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

குஜராத்தில் நர்மதை நதியின் குறுக்கே சர்தார் சரோவர் அணையை கட்டிமுடிக்கவிடாமல், சுற்றச்சுழலுக்கு கேடு எனக் கூறி பல ஆண்டுகளாக நகர்ப்புற நக்சல்கள் பணியை நறுத்திவைத்தனர் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டம் ஏக்தா நகரில் தேசிய சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா: கேரள உயர் நீதிமன்றம் விளாசல்

இன்றும் நாளையும்(23,24தேதி) நடக்கும் இந்த மாநாட்டில், மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு விஷயங்களில் ஒருங்கிணைந்து, குறிப்பாக காலநிலை மாற்றம், பிளாஸ்டிக் கழிவுகளைக் கையாளுதல், விலங்குகள் மற்றும் வனப்பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: 

நகர்புபற நக்சல்கள் மற்றும் வளர்ச்சுக்கு எதிரான சக்திகளுக்கு அரசியல் ரீதியான பின்புலம் இருப்பதால்தான், சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் என்று கூறி சர்தார் அணையைப் பணியை முடிக்கவிடாமல் பல ஆண்டுகளாக நிறுத்தினர்.

அணைக்கு எதிராக பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். இந்த தாமதத்தால் ஏராளமான பணம் வீணானது. இப்போது இந்த அணை கட்டி முடிக்கப்பட்டநிலையில் அவர்களின் கூற்று உண்மையானதா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும்.

நமது சூழியலை காப்பது குறித்து இளைஞர்களுக்கு கற்பிப்பது அவசியம்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்

சர்தார் சரோவர் அணை சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் என்று பொய்யான பிரச்சாரங்களைத் தெரிவித்தனர். ஆனால், இப்போது அணை சூழ்ந்திருக்கும் பகுதி, தீர்த்த சேத்திரம் போல், சுற்றுச்சூழல் நலம்விரும்புவோர் வந்து செல்லும் இடமாக மாறிவிட்டது. சர்தார் வல்லபாய்படேல் சிலை, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பல்வேறு பகுதிகள், காட்டுக்குள் செல்லும் சபாரி, மலர்தோட்டம் என அனைவரையும் ஈர்க்கிறது.


நகர்ப்புற நக்சல்கள் இன்னும் செயல்பாட்டிலும், பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவோடும் இருக்கிறார்கள். சுற்றுச்சூழல்  பாதுகாப்பு என்ற பெயரில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களையும் நிறுத்திவிடுவார்கள்.


இந்த நகர்ப்புற நக்சல்கள் நீதிமன்றத்தையும், உலக வங்கிகையும் கூட ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆதாலல், அதுபோன்ற திட்டங்கள், தொழில் செய்ய எளிதாக்கும் சூழலையும், வாழ்க்கையை எளிதாக்கும் சூழலையும் கொண்டுவரும் என்பதை உறுதி செய்யுங்கள். அந்த திட்டங்களை தேவையில்லாமல் நிறுத்திவிட அனுமதிக்காதீர்கள்.


சுற்றுச்சூழல்அனுமதி வழங்குவதில் மாநில அரசுகள் நடுநிலையான முறையைக் கையாள வேண்டும் அப்போதுதான் நகர்ப்புற நக்சல்கள் சதிக்கு பதிலடி கொடுக்க இயலும். சுற்றுச்சூழல் அனுமதிக்காக பல்வேறு மாநிலங்களில் 6ஆயிரம் விண்ணப்பங்கள் தேங்கியுள்ளன. 

கேரள-வில் பிஎப்ஐ நடத்தும் ஹர்தாலில் பயங்கர வன்முறை: பலர் காயம்: பேருந்து மீது கல்வீச்சு
இதில் 6,500 விண்ணப்பங்கள் வனத்துறை ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன. இவ்வாறு தாமதம் செய்வதால் அந்தத் திட்டத்தின் செலவு அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த காலதாமதத்தை குறைக்க அனைவரும் முயற்சிப்பது அவசியம். உண்மையிலேயே சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களை கிடப்பில் போடலாம். 


டெல்லியில் சமீபத்தில் பிரகதிமைதான் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.இதன் மூலம் ஆண்டுக்கு 55 லட்சம் லிட்டர் எரிபொருள் சேமிக்கப்படும். 13 ஆயிரம் டன் கார்பன் வெளியேற்றம் குறையும். இந்த கார்பனை உள்ளிழுக்க 6 லட்சம் மரங்கள் தேவை. மேம்பாலங்கள், ரயில் திட்டங்கள், கார்பனை வெளியேற்றத்தைக் குறைக்கும். ஆதலால் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் போது இந்த கோணத்தை புறக்கணிக்காதீர்கள்


இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்
 

click me!