kailasa: swami nithyananda:ஆபத்தான நிலையில் நித்தியானந்தா ! இலங்கையில் மருத்துவதஞ்சம் கேட்டு கடிதம்

By Pothy Raj  |  First Published Sep 3, 2022, 9:58 AM IST

பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நித்தியானந்தா உடல்நிலை மிகவும் மோசமான சூழலில் இருப்பதையடுத்து,  இலங்கையில் அரசியல் மற்றும் மருத்துவ தஞ்சம் கேட்டு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். 


பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நித்தியானந்தா உடல்நிலை மிகவும் மோசமான சூழலில் இருப்பதையடுத்து,  இலங்கையில் அரசியல் மற்றும் மருத்துவ தஞ்சம் கேட்டு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

கடந்த மாதம் 7ம் தேதி அதிபர் விக்ரசிங்கேவுக்கு நித்தயானந்தா சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆனால், நித்யானந்தாவுக்கு அடைக்கலம் கொடுப்பது குறித்து இலங்கை அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. 

Tap to resize

Latest Videos

sri lanka: gotabaya rajapaksa:இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தாய்லாந்திலிருந்து கொழும்பு திரும்பினார்

இலங்கை அரசின் உயர் அதிகாரிகள் தரப்பில் அதிபர் விக்ரமசிங்கேவுக்கு, நித்தியானந்தா தரப்பில் கடிதம் எழுதப்பட்டதை உறுதி செய்தனர்.  

அந்தக் கடிதத்தில் “ நித்தியானந்தா உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால், அவருக்கு அவசரமாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். ஆனால், கைலாசா தீவில் போதுமான வசதிகள் இல்லை ஆதலால், மருத்துவ வசதிக்கு ஏற்பாடு செய்ய அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது

கைலாசா தீவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் நித்தியபிரேமாத்மா ஆனந்த சுவாமி, அதிபர் விக்ரசிங்கேவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 

அதிர்ச்சி சம்பவம்.!! ஆப்கனில் தொழுகையின் போது குண்டுவெடிப்பு - தலிபான் மதகுரு உட்பட 21 பேர் பலி

ஸ்ரீ நித்தியானந்தா பரமசிவம் சுவாமிகளின் உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதால் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பது அவசியம். நித்தியானந்தா உடலுக்கு என்ன நேர்ந்தது  என்பதை கைலாசாவில் உள்ள மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தனிஆட்சி பெற்ற கைலாசாவில் போதுமான மருத்துவ வசதிகளும் இல்லை. ஆதலால், உடனடியாக நித்யானந்தாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது அவசியமாகிறது. 

ஆதலால் நித்தியானந்தாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு அரசியல் புகலிடம் தர வேண்டும். விமான ஆம்புலன்ஸ் மூலம் நித்தியானந்தாவை இலங்கைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க உதவ வேண்டும். சில சக்திகளால் நித்தியானந்தாவின் உயருக்கு ஆபத்து இருக்கிறது. ஆதலால், அவரின் பாதுகாப்பை உறுதி செய்து, கைலாசாவில் இருந்து பாதுகாப்புடன் செல்வதே சிறந்ததாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 

nasa: Artemis: மீண்டும் நிலவுப் பயணம்: நாசாவின் ஆர்டெமிஸ் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது

நித்யானந்தாவின் மருத்துவ சிகிச்சைக்கு தேவைாயன அனைத்து செலவையும் கைலாசா அரசு ஏற்றுக்கொள்ளும். நித்தியானந்தாவுக்கு பாதுகாப்பான புகலிடத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். இலங்கையுடன் ராஜாங்கரீதியான உறவை ஏற்படுத்த கைலாசா விரும்புகிறது

நித்தியானந்தாவுக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்கள், மருத்துவ சாதனங்களை கைலாசா அரசு கொள்முதல்செய்யும். எங்கள் நன்றியின் வெளிப்படாக லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை உங்கள் நாட்டுக்கே, மக்களின் நலனுக்காகவே தந்து விடுகிறோம். 

நித்தியானந்தாவுக்கு அரசியல்புகலிடம் வழங்கிவிட்டால், இலங்கையில் தேவையான முதலீட்டையும் நித்தியானந்தா வழங்குவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

click me!