பர்த்டே பங்க்ஷனில் ஜாலியாக நடனமாடும் போது திடீர் மாரடைப்பு.. துடிதுடித்து உயிரிழந்த நபர்! பகீர் வீடியோ வைரல்.!

By vinoth kumar  |  First Published Sep 3, 2022, 9:00 AM IST

பிறந்தநாள் விழாவில் பாடலுக்கு ஏற்றவாறு நடமாடிக்கொண்டிருந்த போதே ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.


பிறந்தநாள் விழாவில் பாடலுக்கு ஏற்றவாறு நடமாடிக்கொண்டிருந்த போதே ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ெபரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தின் பரேலி பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அந்த விழாவில் பிராபாத் என்பவர் பங்கேற்று பாடலுக்கு ஏற்ப ஜாலியாக நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை அங்கிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Tap to resize

Latest Videos

அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

click me!