Nirmala Sitharaman: பிரதமர் மோடி போட்டோ எங்கே? மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்த நிர்மலா சீதாராமன்..!

By Narendran SFirst Published Sep 2, 2022, 11:08 PM IST
Highlights

தெலுங்கானாவில், காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்காதது ஏன் என அம்மாவட்ட ஆட்சியரிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கேட்ட கேள்விக்கு ஆட்சியருக்கு பதில் தெரியாததால், அரை மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

தெலுங்கானாவில், காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்காதது ஏன் என அம்மாவட்ட ஆட்சியரிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார். தெலுங்கானா காமெரெட்டி மாவட்டத்தின் பீர்கூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமான் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு… மம்தாவின் உறவினர் அபிஷேக் பானர்ஜியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!!

Union finance minister asks how much Centre & state are contributing towards subsidised rice for poor at FPS ration shop; when he apparently gave 'wrong' answer, she told officer to revert with right answer in half hour pic.twitter.com/qPZaNz40h7

— Uma Sudhir (@umasudhir)

அப்போது அம்மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பாட்டீலிடம் மக்களுக்கு ரேஷன் கடைகளில் எவ்வளவு அரிசி வழங்கப்படுகிறது என்று கேள்வி எழுப்பினார். இதில், மத்திய, மாநில அரசுகளின் பங்கு என்னவென்று கேட்டார். இந்த கேள்விக்கு தவறான பதில் கூறியதால் அரை மணி நேரத்தில் விவரத்தைக் கண்டறிந்து தெரிவிக்கும்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார். மேலும் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லை.

இதையும் படிங்க: UPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு.. காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி..

நீங்கள் ஒரு மாவட்ட ஆட்சியராக, பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த படத்தை யாரும் அகற்றக்கூடாது, கிழிக்கக் கூடாது. சேதப்படுத்தக் கூடாது. மக்களுக்கும் அனைத்தையும் இலவசமாக அளிக்கும் பிரதமரின் ஒரு போட்டோ வைப்பதற்கு எதிர்ப்பது ஏன்? ஏன் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். 


தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் முன்பு ஆட்சியரிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ''தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தில் ஒரு கிலோ அரிசியின் சந்தை விலை ரூ. 32-35 ஆக இருந்ததது. அப்போது, ​​​​மத்திய அரசு தனது பங்களிப்பாக சுமார் 28 முதல் 30 ரூபாயை கொடுத்தது. இதில், மாநில அரசின் பங்கு ரூ. 2 அல்லது 3 ஆகவும், பயனாளிகளின் பங்கு ரூ. 1 ஆக மட்டுமே இருந்தது'' என்றா. இதை மாவட்ட ஆட்சியரும் ஒப்புக் கொண்டார்.  “மோடி அரசாங்கம் இப்போது போக்குவரத்து, சேமிப்பு மற்றும் தளவாடங்கள் உட்பட இலவச அரிசியை வழங்கி வருகிறது. ஆனால், தெலுங்கானா முழுவதும் பிரதமரின் போஸ்டர்கள் எங்கும் ஒட்டப்படுவதில்லை. ஓட்டினாலும் கிழித்து விடுகின்றனர் அல்லது நீக்கி விடுகின்றனர். இனிமேல் இதுபோன்று நடக்காது என்பதற்கான உத்தரவாதத்தை  நீங்கள் கொடுக்க வேண்டும், அடுத்த முறை வரும்போது உங்களைத்தான் கேட்பேன்'' என்று உத்தரவு பிறப்பித்துச் சென்றார்.

click me!