நிபா வைரஸின் இறப்பு விகிதம் கோவிட்-ஐ விட மிக அதிகம்.. ICMR தலைவர் எச்சரிக்கை..

By Ramya s  |  First Published Sep 16, 2023, 8:15 AM IST

நிபா வைரஸ் இறப்பு விகிதம் கோவிட்-ஐ விட அதிகமாக உள்ளது என ஐசிஎம்ஆர் தலைவர் டாக்டர் ராஜீவ் பால் எச்சரித்துள்ளார்.


நிபா வைரஸின் இறப்பு விகிதம் கோவிட் -19 ஐ விட அதிகமாக உள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் டாக்டர் ராஜீவ் பால் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர் “ "நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு மிக அதிகமாக உள்ளது. அதாவது கொரோனாவின் இறப்பு விகிதம் 2 - முதல் சதவீதமாக இருக்கும் நிலையில், நிபாவின் இறப்பு விகிதம் 40 முதல் 70 சதவீதம் வரை உள்ளது. இறப்பு விகிதம் மிக அதிகமாக இருப்பதால் நிபா வைரஸின் பரவலை கட்டுப்படுத்த முயற்சிகள் நடந்து வருகிறது.” என்று தெரிவித்தார். கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏன் தொடர்ந்து வெளிவருகின்றன என்பது குறித்து பேசிய ஐசிஎம்ஆர் தலைவர், பரவலின் தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாக கூறினார்.

நிபா பற்றிய முக்கிய அப்டேட்ஸ்

Tap to resize

Latest Videos

கேரளாவில் நிபா வைரஸ் காரணமாக இருவர் உயிரிழந்துள்ள நிலையில் அம்மாநில அரசு நோய்த்தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் பல கிராமங்கள் கட்டுப்பாட்டு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக ஆபத்துள்ள நிபா நோயாளிகள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நிபாவால் உயிரிழந்த இருவரின் வழித்தடங்கள் வெளியிடப்பட்டதால் மக்கள் அந்த வழிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று, கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள 39 வயது நபருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தின் மொத்த நிபா பாதிப்பு எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது. 

நிபா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள அதிக ஆபத்துள்ள தொடர்பு பட்டியலில் உள்ளவர்களை சோதனை செய்கிறது. நேர்மறை நோயாளிகளின் தொடர்பு பட்டியலில் மொத்தம் 1,080 நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், மாதிரிகள் சேகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் உள்ள நிபா வைரஸ் பங்களாதேஷ் மாறுபாடு.. அதிக ஆபத்தானதா? என்ன சிகிச்சை?

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோழிக்கோட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரை ஒரு வாரம் மூடப்பட்டிருக்கும், அதே நேரத்தில் ஆன்லைன் வகுப்புகள் உறுதி செய்யப்படும். இதற்கிடையில், நிபாவுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளும் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூடி மருத்துவக் குழுவை அமைத்து அறிக்கையை சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 இந்த முறை கேரளாவில் காணப்படும் நிபா வைரஸ் பங்களாதேஷ் மாறுபாடு ஆகும். இந்த மாறுபாட்டின் தொற்று பரவல் விகிதம் குறைவாக இருந்தாலும் ஆனால் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த மாறுபாடு மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. நிபா என்பது விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ் ஆகும், இது பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது அசுத்தமான உணவுகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. பின்னர் அது பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். காய்ச்சல், தலைவலி, இருமல், சுவாசிப்பதில் சிரமம், வாந்தி ஆகிய்வை இதன் அறிகுறிகளாகும். சில நேரங்களில் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி மூளை காய்ச்சலை ஏற்படுத்தும். இதன் காரணமாக உயிரிழப்பு ஏற்படலாம். நோய்த்தொற்றைத் தடுக்க அல்லது குணப்படுத்த தடுப்பூசிகள் இல்லை, 

கேரளாவில் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு நான்காவது நிபா பரவல் இதுவாகும். 2018 ஆம் ஆண்டில் கேரளாவில் முதன்முதலில் நிபா பரவியபோது பாதிக்கப்பட்ட 23 பேரில் 21 பேர் இறந்தனர். 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டில், நிபா வைரஸ் காரணமாக மேலும் இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!