உயிரோடு வருவேனா தெரியவில்லை.. நம் மகனை பார்த்துக்கொள் - இறக்கும் முன் மனைவியுடன் உருக்கமாக பேசிய ஹுமாயுன்!

By Ansgar R  |  First Published Sep 15, 2023, 9:16 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில், பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட மூன்று பாதுகாப்புப் படை வீரர்களில் ஒருவரான துணைக் கண்காணிப்பாளர் ஹுமாயுன் பட்டின் உடல் நேற்று வியாழன் அன்று அடக்கம் செய்யப்பட்டது.


ஹுமாயுன் பட் கடந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரது மனைவி பாத்திமாவுக்கு கடந்த 29 நாட்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. ஊடகங்கள் அளித்த  தகவல்களின்படி, இறப்பதற்கு முன்பாக ஹுமாயூன் பட், தனது மனைவிக்கு வீடியோ கால் மூலம் பேசியுள்ளார். 

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற TRF பயங்கரவாதிகளின் தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் அவரது மனைவியோடு அவர் வீடியோ காலில் பேசியுள்ளார் அப்போது, "நான் மீண்டு உயிரோடு வருவேனா தெரியவில்லை, அப்படி நான் மீண்டு வரவில்லை என்றால், தயவுசெய்து நம் மகனைக் கவனித்துக் கொள்" என்று ஹுமாயூன் பட் பாத்திமாவிடம் வீடியோ அழைப்பில் கூறியதாகக் கூறப்படுகிறது.

Latest Videos

undefined

பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு நிதியதவி.. பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் செப்.17-ல் தொடக்கம்..

சம்பவம் நடந்த அன்று, வழக்கம் போல ஹுமாயுன், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முன்னால் இருந்து தலைமை தாங்கினார். அனந்த்நாக்கின் அடர்ந்த குடுல் கோகர்நாக் காடுகளில், மறைந்திருந்த பயங்கரவாதிகள் மீது அவர் தாக்குதலைத் தொடங்கினார், ஆனால் அந்த தாக்குதலில் துரதிஷ்டவசமாக அவரும் கடுமையாக தாக்கப்பட்டார். 

உடனே அவரை காக்க ​​ஹெலிகாப்டர் மீட்புக் குழுவினர் விரைந்தனர், இருப்பினும் கடுமையான ரத்தப்போக்கு காரணமாக கடந்த செப்டம்பர் 13 புதன்கிழமை அதிகாலையில் அவர் உயிர் பிரிந்தது. அவர் தனது 29 நாட்களே ஆன கைக்குழந்தையையும், மனைவியையும் தனது ஃபோன் மூலம் பார்த்தபடியே இறந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹுமாயுன் மற்றும் பாத்திமா தம்பதியினர் இன்னும் 15 நாட்களில் தங்கள் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடவுள்ளது தான் கொடுமையின் உச்சம்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த பட், கடந்த ஆண்டு தான் திருமணம் செய்து கொண்டார். அவரது உடல் மூவர்ணக் கொடியில் போர்த்தப்பட்ட நிலையில் அவரது சொந்த கிராமமான புத்காமுக்கு வந்தடைந்தபோது, ​​நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தத் அங்கு திரண்டிருந்தனர்.

பட், ஸ்ரீநகரின் பர்ன் ஹால் பள்ளியில் படித்தவர் மற்றும் வடக்கு காஷ்மீரில் உள்ள எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரியில் பொறியாளராகப் பட்டம் பெற்றவர் ஆவர். ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையின் ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் ஜெனரல் குலாம் ஹசன் பட்டின் மகனான பட், தனது தந்தையைப் போலவே காக்கி உடையை அணிய முடிந்ததை எண்ணி அடிக்கடி பெருமிதம் கொண்டவர் ஆவார்.

ககன்யான்.. இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணம் - புதிய மற்றும் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்ட ISRO!

click me!