இந்தியாவின் முதல் மனித விண்வெளி விமானமான ககன்யான், எதிர்வரும் 2024ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் ஏவப்பட அதில வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் சென்ற ஆண்டே வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ககன்யான் குறித்த முக்கிய தகவல் ஒன்று இப்பொது வெளியாகியுள்ளது.
இஸ்ரோ வெளியிட்ட தகவலின்படி Crew Escape System எனப்படும், விண்கலத்தின் முக்கிய அமைப்பை சரிபார்க்க, இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ககன்யானின் முதல் சோதனை வாகனப் பணி ஓரிரு மாதங்களில் தொடங்கப்படும் என்று இஸ்ரோவின் முக்கிய அதிகாரி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தார்.
பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட தேசிய விண்வெளி ஏஜென்சியின் அதிகாரிகளின் கூற்றுப்படி, ககன்யான் திட்டத்தின் நான்கு முக்கிய மிஷன்களில் இது முதன்மையானது. முதல் சோதனை வாகனப் பணி, TV-D1, இரண்டாவது சோதனை வாகனப் பணி, TV-D2 மற்றும் இறுதியாக ககன்யானின் (LVM3-G1) ஆளில்லாத சோதனை ஓட்டத்தை துவங்கும்.
டீ கடை டூ செங்கோட்டை: பிரதமர் மோடி அரசியல் பயணம்!
இஸ்ரோ அதிகாரிகளின் கூற்றுப்படி, ககன்யான் திட்டம் இரண்டு முதல் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை பூமியைச் சுற்றி சுமார் 400 கிமீ சுற்றுவட்டப் பாதையில் ஒரு முதல், மூன்று நாள் பணிக்காக அழைத்துச் சென்று அவர்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வரும் இந்தியாவின் திறனை நிரூபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பூமிக்கு திரும்போது அவர்கள் இந்திய கடல் பகுதியில் ஒரு நியமிக்கப்பட்ட இடத்தில் தரையிறங்குவார்கள்.
இஸ்ரோவின் ஹெவி-லிஃப்ட் லாஞ்சரான எல்விஎம்3 ராக்கெட், ககன்யான் பயணத்திற்கான ஏவுகணை வாகனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது ஒரு திட நிலை, ஒரு திரவ நிலை மற்றும் ஒரு கிரையோஜெனிக் நிலை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. LVM3ல் உள்ள அனைத்து அமைப்புகளும் மனித மதிப்பீடு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மீண்டும் கட்டமைக்கப்பட்டுள்ளன.
சந்திரயான் 3 வெற்றியை தொடர்ந்து இந்தியா இந்த ககன்யான் திட்டத்திலும் வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் பயணம் செய்வதால் மேற்குறிய அந்த Crew Escape System மிக மிக முக்கியமானது என்றும், அதன் அமைப்பை சோதிக்கும் பணி ஓரிரு மாதங்களில் ஆரம்பிக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மத சுதந்திரம்: விசாரணை நடத்தும் அமெரிக்க ஆணையம்!