தொலைக்காட்சி தொகுப்பாளர்களை புறக்கணித்தது ஏன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விளக்கம் அளித்துள்ளார்
பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும் நடைபெற்றது. இதையடுத்து, இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் நடைபெற்றது.
மொத்தம் 28 கட்சிகளை கொண்ட இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டத்தில், கூட்டணியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் கடந்த 13ஆம் தேதி மாலை நடைபெற்றது.
undefined
அக்கூட்டத்தில், தொகுதி பங்கீடு, பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவது, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, சில தொலைக்காட்சிகளின் தொகுப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை இந்தியா கூட்டணி புறக்கணிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தொலைக்காட்சி சேனலில் எந்த தொகுப்பாளர் நடத்தும் விவாதத்துக்கு இந்தியக் கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை அனுப்பலாம் என்பதை தீர்மானிக்க ஊடகங்களுக்கான துணைக் குழுவுக்கு ஒருங்கிணைப்புக் குழு அங்கீகாரம் அளித்தது. தங்கள் கருத்துக்களுடன் ஒத்துப்போகாத தொகுப்பாளர்களை புறக்கணிக்கவும் எதிர்க்கட்சி கூட்டணி முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவில் மத சுதந்திரம்: விசாரணை நடத்தும் அமெரிக்க ஆணையம்!
இதையடுத்து, இந்தியா கூட்டணி சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் பல்வேறு ஊடக நிறுவனங்களில் பணியாற்றி வரும் 14 செய்தியாளர்களின் நிகழ்ச்சிகளை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டு அவர்களது பட்டியல் வெளியானது. ஊடகத்தின் ஒரு பிரிவினர் தொடர்ந்து விரோத போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் இந்தியா கூட்டணி சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தியா கூட்டணியின் இந்த முடிவுக்கு பாஜக கடும் எதிர்வினையாற்றியது. இந்த நிலையில், தொலைக்காட்சி தொகுப்பாளர்களை புறக்கணித்தது ஏன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள்தான் ஊடகங்கள். அரசாங்கத்தின் தவறுகளை சரிசெய்வதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது. அதேபோல், எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவிக்க ஊடகங்களும் துணைபோகின்றன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிலர். ஊடகங்களில் அரசாங்கத்தை ஆதரித்து எதிர்ப்பின் முகத்தை அழித்து வருகின்றனர். அது பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தினால் ஸ்பான்சர் செய்யப்பட்ட இதழியல் நடவடிக்கை. அதனால்தான் இந்திய கூட்டணி இந்த முடிவை எடுத்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.