பல நாட்டு தலைவர்களை உள்ளடக்கிய சர்வே.. தொடர்நது முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி - முழு விவரம் இதோ!

By Ansgar R  |  First Published Sep 15, 2023, 5:10 PM IST

கடந்த செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ம் தேதி ஜி20 மாநாடு வெகு நேர்த்தியாக இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்று முடிந்தது. பல நாட்டு தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டை, இந்தியா வெற்றிகரணமாக நடத்தி முடித்ததற்கு, உலக அரங்கில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் உலகளாவிய தலைவர்கள் குறித்த மதிப்பீடு ஒன்று வெளியாகியுள்ளது.


அதில் சுமார் 76 சதவீத ஒப்புதல் மதிப்பீடுகளுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உலகின் ‘மிகவும் பிரபலமான’ தலைவராக உருவெடுத்துள்ளார் என்று மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த மதிப்பீட்டின்படி, பிரதமர் மோடியின் மதிப்பீடுகள் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட பிற தலைவர்களின் மதிப்பீடுகளை விட அதிகமாக உள்ளது. இந்த கருத்துக்கணிப்பு 22 உலக தலைவர்களை உள்ளடக்கிய மதிப்பீடு என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

undefined

பிரமாண்டம்! குஜராத்தில் உருவாகி வரும் யஷோபூமி.. பிரதமர் மோடியின் பிளான் - முழு விபரம் இதோ !!

இதற்கு முன்னதாக மார்ச் 22 முதல் 28, 2023 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வெளியான அதே மதீப்பீடுகளுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஜி20 மாநாடு நடந்து முடிந்த பிறகு அதே முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த பிப்ரவரியிலும், பிரதமர் மோடி 78 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டில் உலகின் மிகவும் பிரபலமான உலகளாவிய தலைவராக திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆய்வை அமெரிக்காவைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான 'மார்னிங் கன்சல்ட்' நடத்தியது.

இந்தப் பட்டியலை வெளியிடும் மார்னிங் கன்சல்ட், அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம். அரசியல் தேர்தல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் வாக்களிப்பு பிரச்சினைகள் குறித்த நிகழ்நேர வாக்குப்பதிவு தரவை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் இது என்று அதன் இணையதள தகவல் கூறுகிறது. உலகம் முழுவதும் தினமும் சுமார் 20,000 நேர்காணல்கள் எடுக்கப்படுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மத சுதந்திரம்: விசாரணை நடத்தும் அமெரிக்க ஆணையம்!

click me!