சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில், திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி கடந்த 9ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அவர்கள், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்களை சிறையில் சென்று சந்திக்க அனுமதி அளிக்குமாறு மனு ஒன்றை அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒன்பதாம் தேதி ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு நடந்த விசாரணையில் அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
undefined
பல நாட்டு தலைவர்களை உள்ளடக்கிய சர்வே.. தொடர்நது முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி - முழு விவரம் இதோ!
இதனை தொடர்ந்து ராஜமுந்திரியில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டார், அவருக்கு வீட்டு உணவு வழங்க அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் கைது குறித்து அவருடைய மகன் நாரா லோகேஷன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரபல தமிழ் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பேசி ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியானது.
அப்பொழுது "நீங்கள் தைரியமாக இருங்கள், என்னுடைய நண்பர் சந்திரபாபு நாயுடு எந்த தவறையும் செய்திருக்க மாட்டார், அவர் செய்த பல நலத்திட்ட உதவிகளும், மக்களுக்கு செய்த தொண்டும் அவரை காப்பாற்றும்" என்று அவர் கூறியதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்பொழுது ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு அவர்களை சிறைக்கு சென்று நேரில் சந்திக்க அனுமதிக்குமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தொலைக்காட்சி தொகுப்பாளர்களை புறக்கணித்தது ஏன்? கே.சி.வேணுகோபால் விளக்கம்!