”புதிதாக 30 ஆயிரம் வாக்கு தணிக்கை சீட்டு எந்திரம்” - குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தலில் பயன்படுத்தப்படுகிறது

 
Published : Apr 20, 2017, 05:27 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
”புதிதாக 30 ஆயிரம் வாக்கு தணிக்கை சீட்டு எந்திரம்” -  குஜராத், இமாச்சலப்பிரதேச தேர்தலில் பயன்படுத்தப்படுகிறது

சுருக்கம்

new vote machines in gujarat himachal

இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் இமாச்சலப்பிரதேசம், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், வாக்குத் தணிக்கைச் சீட்டு எந்திரம் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.இதற்காக புதிதாக 30 ஆயிரம் எந்திரங்கள் வாங்கப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின், இதற்கான முறைப்படியான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் எனத் தெரிகிறது.

இந்த இரு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வாங்கப்படவுள்ள 30 ஆயிரம் வாக்குத்தணிக்கை சீட்டு எந்திரங்கள் வரும் ஜூலை மாதம் தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்கும். ஏற்கனவே இருக்கும் வாக்குத்தணிக்கை சீட்டு எந்திரங்களோடு, இந்த புதிய எந்திரங்களையும் சேர்த்துப் பயன்படுத்தும்போது, இரு மாநிலத் தேர்தலுக்கும் போதுமானதாக இருக்கும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லுநடக்கிறது எனக் குற்றம்சாட்டி, பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பிரச்சினையைகிளப்பி  வருகின்றனர். இதையடுத்து, 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்குள் 15 லட்சம் வாக்குதணிக்கை சீட்டு எந்திரங்கள் வாங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதற்கான நிதியையும் மத்திய அரசு ஒதுக்கிஉள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,  “ இப்போது தேர்தல் ஆணையத்திடம் வாக்குத்தணிக்கை சீட்டு எந்திரங்கள் 53 ஆயிரத்து 500 இருக்கின்றன. புதிதாக வாங்கப்படும் 30 ஆயிரம் எந்திரங்களைச் சேர்க்கும் போது, மொத்தம் 84 ஆயிரம் எந்தரங்கள் வரை எண்ணிக்கை உயரும். இந்த எந்திரங்கள் குஜராத், இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் பயன்படுத்த போதுமானதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இரு மாநிலங்களிலும் வாக்குத்தணிக்கை சீட்டு எந்திரங்கள் பயன்படுத்துவது குறித்த முறைப்படியான அறிவிப்பு, தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டபின் அறிவிக்கப்படும்.

182 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொண்ட குஜராத் மாநிலத்தின் சட்டப்பேரவைக் காலம் 2018 ஜனவரி 2ந்தேதியோடு முடிகிறது. 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப்பிரதேசத்தின் சட்டப்பேரவையின் பதவிக்காலம், ஜனவரி 7-ந்தேதியோடு முடிகிறது. ஆதலால், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் எனத்தெரிகிறது.

இந்த இரு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தோடு, வாக்கு தணிக்கை சீட்டு எந்திரமும் சேர்த்து பயன்படுத்தப்படும் போது, வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம், சரியான நபருக்கு தனது வாக்கு பதிவாகி இருக்கிறதா என்பதை வாக்குத்தணிக்கை சீட்டு மூலம் காணமுடியும். அதன்பின், இந்த சீட்டை அருகில் இருக்கும் பெட்டியில் போட்டுவிட்டு செல்ல வேண்டும்.

இந்த எந்திரம் மூலம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லு முல்லுசெய்வது தடுக்கப்படும், வாக்கு எண்ணிக்கையின் போது, சோதித்து பார்க்கவும் இந்த சீட்டு பயன்படும்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா எங்களுக்கு இரண்டாவது வீடு! டெல்லியில் ஆப்கானிஸ்தான் அமைச்சர் உருக்கம்
நாட்டுக்கு ஒரு மோடி போதுமா? ஹனுமான்–ராமன் உதாரணம்… மோடி பற்றி ஜெய்சங்கர் ஓப்பன் டாக்