பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, உமாபாரதிக்கு எத்தனை ஆண்டு சிறை கிடைக்கும்?

 
Published : Apr 20, 2017, 02:51 PM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, உமாபாரதிக்கு எத்தனை ஆண்டு சிறை கிடைக்கும்?

சுருக்கம்

is advani and uma bharti receive punishment in babri masjid demolition case

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பா.ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்ட பலருக்கு ற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டியதாக எல்.கே.அத்வானி(வயது89), முரளி மனோகர் ஜோஷி(வயது 83), உமாபாரதி(வயது57), சம்பத் ராய் பன்சால், சதீஸ் பிரதான், தரம் தாஸ், மகந்த் நிர்தியா கோபால் தாஸ், மகாமதலீஸ்வர் ஜகதீஸ் முனி, ராம் விலாஸ் விதாந்த், வைகுண்ட் லால் சர்மா, சத்தீஸ் சந்திரா ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்து இருந்து. அலகாபாத் நீதிமன்ளம் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் விடுவித்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் தொடர்ப்பட்டு இருந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. மேலும், 2 ஆண்டுகளுக்குள் தினந்தோறும் வழக்கை நடத்திவிசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டது.

மேலும்,இதில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த பால் தாக்கரே, கிரிராஜ் கிஷோர், அசோக் சிங்கால், பிரம்ஹான்ஸ் ராம் சந்திர தாஸ் ஆகியோர் இறந்துவிட்டதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவர்கள் மீது இரு சமூகத்தினருக்கும், மதத்தினருக்கும் இடையே வன்முறையை, பிரிவினையை தூண்டுதல், நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும்.

மேலும், வழிபாட்டு தலங்களை இடித்தல், அவமதிப்பு செய்தல் போன்ற பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 2 ஆண்கள் சிறை, ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மத உணர்வுகளை, நம்பிக்கைகளை புண்படுத்துதல் குற்றத்துக்காக 3ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

மேலும் அடையாளம் தெரியாத கரசேவரகள் மீது தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், மசூதியை சேதப்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை கிடைக்கும். பாபர் மசூதி இடிப்பு கலவரத்தின் போது மக்களிடம் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கரசேவர்கள் மீதுகுற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7ஆண்டுகள் சிறையும், பாதுகாக்கப்பட்ட இடத்தில் அத்துமீறிநுழைதலுக்கு 2ஆண்டுகள் சிறையும் விதிக்கப்படலாம்.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல்! வாரணாசியில் தொங்கிவைத்த மத்திய அமைச்சர்!