குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் இதற்கான பிரிவு உபசார நிகழ்வின் பொழுது மோடிக்கு, ராம்நாத் கனிவான வணக்கம் தெரிவித்தார்.
இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் கடந்த 2017ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்டார். கடந்த வாரம் நடைபெற்ற குடியரசுத் தலைவருக்கானத் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றிபெற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் இன்றோடு முடிவுபெறுவதையொட்டி, நாடாளுமன்றத்தில் உள்ள மைய மண்டபத்தில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நேற்று நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சர்ச்சை.. பள்ளிகளுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு !
இந்த விழாவில் பிரதமர் மோடி, குடியரசு துணைத்தலைவர் வெங்கையநாயுடு, சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.விழாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை தந்தபோது அனைவரும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர். அப்போது அனைவருக்கும் அவருக்கு வணக்கம் சொல்ல ராம்நாத் கோவிந்தும் பதிலுக்கு வணக்கம் சொல்லியபடியே வந்தார்.
முன்வரிசையில் அருகருகே நின்றுகொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து நன்றி தெரிவித்தார். ராம்நாத் கோவிந்த் நன்றி சொன்னபோது அவர் பின்னால் கேமராமேன்கள் காட்சிகளை ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்தனர். அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை கவனிக்கவில்லை.
மேலும் செய்திகளுக்கு..மனைவியின் பிறப்புறுப்பில் பீர் பாட்டில்.. நண்பருடன் சேர்ந்து கணவன் செய்த கொடூர வெறிச்செயல்
இதனால் சில வினாடிகள் அவர் அருகே நின்ற ராம்நாத் கோவிந்த், பிரதமர் தன்னை பார்க்காததை கண்டு நகர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. குடியரசுத் தலைவர் வணக்கம் சொல்லும் போது, பிரதமர் மோடி வணக்கம் சொல்லாமல் கேமராவிற்கு போஸ்கொடுத்துக் கொண்டிருப்பதாக விமர்சனம் செய்தனர் நெட்டிசன்கள். காங்கிரஸ்,ஆம் ஆத்மி,திரிணாமூல் காங்கிரஸ் என எதிர்க்கட்சிகள் அனைத்தும் இந்த காணொளியை பகிர்ந்து கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இதுகுறித்து பதில் அளித்த பாஜகவினர் இந்த காட்சிக்கு முந்தைய, அதாவது பிரதமர் வணக்கம் சொல்லும்போது குடியரசுத் தலைவரும் வணக்கம் சொல்லும் காட்சிகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதுதான் முழு வீடியோ. கட் செய்த வீடியோவை வெளியிட்டு ஆதாயம் தேட பார்க்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் இந்த வீடியோ போலியானது என்று ட்விட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில், இந்த காணொளியை பிளாக் செய்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.
மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !