
தமிழகம் முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக மாணவர்கள் அறிந்து கொள்ளும்விதமாக சிபிஎஸ்இ முடிவை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அவர்களது, எண்ணை வைத்து இணையதளம் மூலம் அவர்கள் அறிந்து கொள்ளலாம்.
இதைதொடர்ந்து மாணவர்களின் மதிப்பெண் குறித்த புள்ளி விவரங்களை தனியான அறிவிப்பை, சிபிஎஸ்இ அறிவிக்கும். இதனை கொண்டு மாணவர்கள் தங்களது மதிப்பெண்களை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. தற்போது மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களின் மதிப்பெண் படி மருத்துவ படிப்பு உள்ளிட்டவைக்கு அந்தந்த பிரிவின் கீழ் (எஸ்சி, எஸ்டி) இடம் ஒதுக்கப்படும் என தெரியவருகிறது.
இதையொட்டி மத்திய அரசு அகில இந்திய அளவில் தர வரிசை பட்டியல் வெளியிட உள்ளது. அதில் உள்ள தர வரிசைப்படி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இதையடுத்து மாநில அரசு சார்பில் தர வரிசை பட்டியல் வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் மாநில அளவில் வெளியிடப்படும் தர வரிசை பட்டியலை கொண்டு, மத்திய அரசின் பட்டியலுடன் ஒப்பீடு செய்து, மாணவர்களுக்கான தர வரிசை பட்டியலும், இட ஒதுக்கீடும் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.