
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த வேட்புமனு தாக்கலை ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும், பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தாக்கல் செய்ய உள்ளதாகக தெரிகிறது.
பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற இல்லத்தில், தமது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
பாஜக குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பரிந்துரை செய்ய உள்ளனர். அது மட்டுமன்றி பல்வேறு கட்சிகளின் ஆதரவு பெற்றுள்ள ராம்நாத் கோவிந்த் 60 சதவீத வாக்குகள் பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் தேர்தலில் மீரா குமார் போட்டியிடுகிறார். இன்னும் சில நாட்களில் மீரா குமாரும், வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இரு தரப்பினரும் தலித் வேட்பாளர்களையே நிறுத்தியிருப்பதால், குடியரசு தலைவர் தேர்தல் தலித்துக்கும் மற்றொரு தலித்துக்குமான போட்டியாக மாறியுள்ளது.