நீட் தேர்வில் முதல் 10 இடங்களில் 4 இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்துள்ளனர்.
நாடு முழுவதும் இன்று நீட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.44 லட்சம் பேரில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் முதல் 10 இடங்களில் 4 இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்துள்ளனர். அதன்படி, தமிழகத்தை சேர்ந்த பிரபஞ்சன் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று, அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கௌஸ்தவ் பாரி என்ற மாணவர் 720-க்கு 716 மதிப்பெண் பெற்று 3-ம் பிடித்துள்ளார். சூர்யா சித்தார்த் என்ற மாணவர் 715 மதிப்பெண் பெற்று 5-வது இடத்தில் உள்ளார். வருண் என்ற மாணவர் 715 மதிப்பெண் பெற்று 9-வது இடத்தில் உள்ளார்.
நீட் தேர்வில் முதல் 10 இடங்களில் 4 இடங்களை தமிழக மாணவர்கள் பிடித்துள்ளனர். | | | | | | pic.twitter.com/Ch4SPuswYO
— Asianetnews Tamil (@AsianetNewsTM)
மதிப்பெண் அட்டைகள் விரைவில் neet.nta.nic.in மற்றும் ntaresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் விவரங்கள் மற்றும் அட்டவணை, அந்தந்த மாநிலங்களின் மருத்துவக் கல்வி இயக்ககங்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணையதளங்களில் விரைவில் வெளியிடப்படும்.
கடந்த மே 7-ம் தேதி நீட் இளநிலை மருத்துவ நுழைவு தேர்வு நடைபெற்றது. சுமார் 20 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில் நீட் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் நாட்டிலேயே உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்ச மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பட்டியலில் மகாராஷ்டிராவில், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.