இதுகூட தெரியாமல் காங்கிரஸ் தலைவரா இருக்கீங்க.. பீசா கோபுரத்தை இந்தியாவுடன் ஒப்பிட்டதால் சர்ச்சை..!

By vinoth kumarFirst Published Jan 28, 2022, 1:35 PM IST
Highlights

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியாள் தேசிய சுற்றுலா தினம் தொடர்பாக அவரது பிகைப்படத்துடன் வெளியிட்ட டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியாள் இத்தாலியில் உள்ள பீசா நகர சாய்ந்த கோபுரத்தை முன்னவைப்படுத்தி பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

ஒவ்வொரு ஜனவரி 26ம் தேதியும் குடியரசு தினம் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். ஆனால் அதற்கு முந்தைய நாளில் நாம் தேசிய சுற்றுலா தினத்தை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்ததந்த மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை குறிப்பிட்டு அது தொடர்பாக பதிவுளை பதிவிட்டு வருவார்கள்.மேலும், சுற்றுலாத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும் இடங்கள் குறித்த குறிப்புகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவார்கள். 

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியாள் தேசிய சுற்றுலா தினம் தொடர்பாக அவரது பிகைப்படத்துடன் வெளியிட்ட டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், இந்தியாவின் முக்கிய தளமாகவும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களான தாஜ்மஹால், டெல்லி கேட், குதுப் நினைவுச்சின்னங்கள், செங்கோட்டை ஆகியவை இடம் பெற்றுள்ளன. 

அத்தோடு தாஜ்மஹாலை போன்று இன்னொடு உலக அதிசயங்களில் ஒன்றான பீசா நகர சாய்ந்த கோபுரமும் இடம்பெற்றுள்ளது. இதை தவறுதலாக புகைப்படத்தில் இடம்பெற்றதா அல்லது திட்டமிட்டு செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால், இத்தாலியில் உள்ள பீசா கோபுரத்தை முன்னிலைப்படுத்தும் வகையில்  இந்த புகைப்படத்தை உருவாக்கி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

के अवसर पर सभी प्रदेशवासियों को बहुत-बहुत बधाई एवं हार्दिक शुभकामनाएं। pic.twitter.com/Gm1UuVGt4f

— Ganesh Godiyal (@UKGaneshGodiyal)

 

 

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனிகாந்தியின் சொந்த ஊர் இத்தாலி என்பதால் பீசா நகர சாய்ந்த கோபுரத்தை அவர் பதிவிட்டுள்ளதாக நெட்டிசன்களும், பாஜகவினரும்  வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும், சோனிகாந்தி, ராகுல் காந்தி ஆகியோரை திருப்தி படுத்தும் வகையில் பீசா கோபுரத்தை வெளியிட்டாரா? என்று விமர்சித்தும், கலாய்த்தும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன. இந்நிலையில், புகைப்பட சர்ச்சை தேர்தலில் எதிரொலித்துள்ளது. 

click me!