15-18 வயதினருக்கான தடுப்பூசி... புதிய வழிக்காட்டுதல்களை வெளியிட்டது மத்திய அரசு!!

By Narendran SFirst Published Jan 27, 2022, 9:49 PM IST
Highlights

15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக புதிய வழிக்காட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 

15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக புதிய வழிக்காட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பேராயுதமாக திகழ்வது தடுப்பூசி. அதன்படி இந்தியாவில் மட்டும் 160 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 15 முதல் 18 உட்பட்டவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 15-18 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டுதலின் படி 2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி 01.01.2023 தேதியின் படி 15 வயதை எட்டியவர்கள் தகுதியுடையவர்கள் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2005, 2006 மற்றும் 2007 இல் பிறந்தவர்கள் 01.01.2023 படி 15 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் அடைபவர்கள் தடுப்பூசி செலுத்த தகுதி. 2004 இல் பிறந்து 01.01.2023 முதல் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் அடைபவர்கள் தடுப்பூசி செலுத்த தகுதி. 1962 இல் பிறந்து 01.01.2023 முதல் 60 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் அடைபவர்கள் தடுப்பூசி செலுத்த தகுதி. தகுதியுடைய அனைவரும் தடுப்பூசி செலுத்துவதில் இருந்து தவறி விடக்கூடாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 01-01-2023ல் 15 வயது நிரம்புபவர்களுக்கும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தலாம்.

2007 ஆம் ஆண்டு , அதற்கு முன் பிறந்தவர்கள் 15 18 வயதினருக்கான பிரிவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பில் மாற்றம். ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 01-01-2023ல் 15 வயது நிரம்புபவர்களுக்கும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு , அதற்கு முன் பிறந்தவர்கள் 15 - 18 வயதினருக்கான பிரிவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

click me!